Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா?

இன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
கம்ப்யூட்டர், மொபைல் போன், 'டிவி', வன்முறை, ஆபாச படங்கள், அரசு பார்களை சந்தித்து முட்டி மோதி எழும்புவதற்குள், அவன் வாழ்நாளில் பாதிதுாரம் கடந்து விடுகிறான்.தன்நிலை உணர்ந்து நல்லவனாக முயற்சிக்கும் போது அவன் எதிர்பார்க்கும் அங்கீகாரம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கிடைக்காமல் போகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகிய சமூகக் கொடுமைகளைச் செய்யும் இளைஞர்கள் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகைய செயல்களில் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள் வழிதவறியதற்கு யார் காரணம்?

படிக்கும் வயதில் கவனம் :




சிதறுகிறது எனில் கல்வித்திட்டம் அவனை நல்வழிக்கு ஒருமுகப்படுத்த தவறிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை. பொருளாதார ரீதியாக அவன் வாழ கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தபோதிலும், நல்லெண்ணங்களே அவனின் கல்வித்தகுதிக்கும் வித்தாக உள்ளது என்பதை இன்றையக் கல்வி அளிக்கத் தவறி விட்டது.மதிப்பெண் ரீதியிலான தேர்வுகள் ஒன்றே ஒருவனின் கல்வித்தகுதிக்குச் சான்றாகிறது. 'சமுதாய விலங்கு' என அழைக்கப்படும் மனிதன் தான் வாழும் சமுதாயத்திற்கு தன்னைத் தகுந்தவனாக்கிக் கொள்ள என்ன தகுதிகளை வளர்க்கிறது அல்லது அளிக்கிறது

இன்றைய கல்வித் திட்டம்?




இன்றைய மாணவ சமுதாயம் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாணவர்கள் சுயகவுரவத்திற்கு பெரும் மதிப்பு கொடுக்கிறார்கள். தான், தனது என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழும் சமுதாயச் சூழல் வளர்ந்து கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மை எனபது சிறிதும் இல்லாத காரணத்தால் பிறரின் உணர்வுகள், வலிகள் மிதிபட்டு போகிறது. விளைவுகளை யோசிக்காத மனிதநேயமில்லாச் செயல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. தான் செய்த தவறுகளுக்கான குற்றஉணர்வே இல்லாத மாணவச்சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது எனில் அவனுக்கு இந்த மனவலிமை உருவாக்கியதற்கு யாரை காரணம் காட்டப் போகிறோம்?

நம் கல்வித்திட்டம் :




மூன்று வயது வரை குடும்பத்தில் நல் அரவணைப்போடு வாழ்ந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றபின் அவன் கற்கும் சூழலே அவனின் ஆளுமைப் பண்புகளை உருவாக்குகிறது. அரசு திட்டப்படி அவன் ஐந்து பாடங்களை வாரத்தில் 40க்கு 30 பாடவேளை களில் கற்றுக் கொள்கிறான். மதிப்பீட்டுக் கல்வி, உடற்கல்வி, யோகா போன்ற பாடங்களுக்கு வாரத்தில் ஒருநாள் மற்றும் இரண்டு நாட்கள் மட்டுமே தரப்படுகிறது. பாடங்களை அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் யாரும் இடைநிற்றலோ படிப்பறிவு இல்லாமலோ இல்லை என்று உலகநாடுகளுக்கு சதவீதம் காட்ட வேண்டும். அனைவருக்கும் தேர்ச்சி என்கிற பட்சத்தில் பாடங்களுக்கு எதற்காக அதிக நேரங்களை ஒதுக்கி மதிப்பெண் ரீதியிலான கல்வியை அளிக்க வேண்டும்?நல் மதிப்பீடு, வாழ்க்கை மதிப்பீட்டில்லா கல்வியால் என்ன பயன்? எட்டாம் வகுப்பு வரை பாடங்களைக் குறைத்துக் கொண்டு மாணவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கல்வித் திட்டத்தை உருவாக்கலாமே. ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி, யோகா, தற்காப்புப் பயிற்சி, நல்மதிப்பீட்டுக் கல்வியை மூன்று வயது முதல் 13 வயது வரை நாம் அளிக்கும் போது, அவன் மனிதனாக வாழக்கூடிய தகுதிகளைக் கற்றுத் தருகிறோம். ஆர்வமுடன் மாணவன் பள்ளியில் கல்வி கற்கும் சூழலையும் உருவாக்குகிறோம். நம் கல்வித் திட்டத்தின் படி மதிப்பெண் பெற்றெடுத்த குழந்தைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த 10 சதவீத மதிப்பெண் குழந்தைகள் தான் பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குச் செல்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தவறி விடுகின்றனர். நாமும் நல்மதிப்பீட்டுக் கல்வியை அளிக்கத் தவறி விடுகிறோம். இவையிரண்டும் சேர்ந்து சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

மேலை நாடுகளின் கல்வித் திட்டம்




:நாளைய சமுதாயம் மனிதன் வாழக்கூடிய சமுதாயமாக அமைய வேண்டுமெனில் நம் கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்களை மிக விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும். மேலைநாடுகளில் பள்ளிப்பருவம் முடிந்து கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் முன் பல தகுதிச் சான்றிதழ்களை அடிப்படை தகுதிகளாக அவன் பெற்றிருக்க வேண்டும்.
*முதியோர் மற்றும் கருணை இல்லங்களில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய சான்றிதழ்கள்.
* ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் பிற கண்டங்களில் எந்த நாட்டிலாவது தன்னார்வத் தொண்டு செய்ததற்கான சான்றிதழ்.
*குறிப்பிட்ட எண்களில் ஆய்வுக் கட்டுரைகள், ஒப்படைப்புகள்.
*சமுதாய நலன் பயக்கும் திட்டங்களில் பங்கேற்ற சான்றிதழ்.
*தன் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்.
இவையனைத்திற்கும் புள்ளிகள் ரீதியிலான மதிப்பீடுகளை அளிக்கின்றனர். இதனுடன் அவன் படித்த கல்வி மதிப்பெண்களும் இணைக்கப்படுகிறது. இப்படி பல வகையிலும் மாணவனை சமுதாய நலத்திட்டங்களில் ஊக்குவிக்கும் வண்ணம் செயல்முறை பயிற்சிகளை வகுத்துள்ளனர். படிக்கும் காலத்தில் தவறான பாதையின் பக்கம் போகாதவாறு நல்வழியில் திசை திருப்புகின்றனர்.இத்தகைய கல்வித் திட்டங்கள் நம் நாட்டிற்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில் ஏன் இத்தகைய செயல்முறை பயிற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது? ஜாதி மற்றும் மதிப்பெண் ரீதியிலான ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பலன் தரும் மதிப்பீட்டுக் கல்வி :




மாணவன் வாழும் சமுதாயச் சூழலுக்கேற்ப நல் மதிப்பீட்டுக் கல்வியை வரையறுக்கலாமே. கிராம சுகாதார திட்டங்கள், பசுமை புரட்சி திட்டம், விழிப்புணர்வு செயல்பாடு, மாசு கட்டுப்பாடு, நுாலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு, சாலை பாதுகாப்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்களில் பணியாற்றும் வாய்ப்பு, தற்காப்புப் பயிற்சி, பொது இடங்களை துாய்மை செய்தல், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, படிக்கும் காலத்தில் உழைத்து வேலை செய்தல்.இதுபோன்ற திட்டங்களில் மாணவனை பங்கேற்கச் செய்யும் போது அவன் மனிதநேயத்தோடு சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொள்கிறான். சட்ட திட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறான். சமுதாய நலனுக்காக முயற்சி எடுக்கும் சமூகத் தொண்டனாகும் வாய்ப்புகளைப் பெறுகிறான். தன்னம்பிக்கையோடு ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுகிறான்.
இச்செயல்பாடுகளை மாணவச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.
-மி.மரிய அமலி,
தலைமையாசிரியை,
பல்லோட்டி உயர்நிலைப் பள்ளி,
மதுரை.
9566972165




10 Comments:

  1. மாணவர்கள் என்னசெய்தாலும் ஆசிரியர் அவர்களைக் கண்டிக்கக்கூடாது என்று அரசு கூறுகிறது. மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். ஆகவேகண்டிக்கக்கூடாது !எதிர்கால சமுதாயம் சீரழிகிறது!

    ReplyDelete
  2. No power to teachers... Officer target only 100% result.... No moral. moral Class today.... What can do the trs?..student didn't accept parents and teacher advise...

    ReplyDelete
  3. பெரும் மதிப்பிற்குறிய ஆசிரியர்களே, மாணவர்களை தண்டிக்கின்ற அதிகாரம் வேண்டும் என ஏன் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்? மாணவ சமுதாயம் சீர்கெட்டுப்போவதற்கு ஒரு சாரார் மட்டுமே காரணம் அல்ல. அதே போல் ஆசிரிய சமுதாயத்தால் மட்டுமே மாணவர்களை சீர்படுத்திவிடமுடியும் என்பதும் தவறு. மாணவ சமுதாயம் சீர்கெட்டு போவதற்கான சில காரணங்கள் இதோ:
    1) நல்ல எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழாத பெரியோர்கள்.
    2) சமுதாயத்திற்கு சேவை செய்ய வராமல் பணத்தையும் சுகபோக வாழ்க்கையையும் அனுபவிக்க வரும் அரசியல்வாதிகளும் மதகுருக்களும்.
    3) நேர்மையற்ற அனைத்து பணியாளர்களும்.
    4) கல்வியில் அரசியல் செய்கின்ற ஆட்சியாளர்கள்.
    5) கடமை உணர்ச்சியும் மனசாட்சியும் அற்ற ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள்.
    6) உண்மையான பாசம் இல்லாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்.
    7) பணியை வியாபார நோக்கோடும், சுயநலத்தோடும் செய்கின்ற பத்திரிக்கையாளர்கள். இன்னும் பல......
    குழந்தைகளை சிறுவயதுமுதலே முறையாக வளர்த்து, சரியான கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுத்தால், அவர்களை அடித்து வளர்க்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. நன்றாகவே வளர்வார்கள்.

    ReplyDelete
  4. பெரும் மதிப்பிற்குறிய ஆசிரியர்களே, மாணவர்களை தண்டிக்கின்ற அதிகாரம் வேண்டும் என ஏன் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்? மாணவ சமுதாயம் சீர்கெட்டுப்போவதற்கு ஒரு சாரார் மட்டுமே காரணம் அல்ல. அதே போல் ஆசிரிய சமுதாயத்தால் மட்டுமே மாணவர்களை சீர்படுத்திவிடமுடியும் என்பதும் தவறு. மாணவ சமுதாயம் சீர்கெட்டு போவதற்கான சில காரணங்கள் இதோ:
    1) நல்ல எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழாத பெரியோர்கள்.
    2) சமுதாயத்திற்கு சேவை செய்ய வராமல் பணத்தையும் சுகபோக வாழ்க்கையையும் அனுபவிக்க வரும் அரசியல்வாதிகளும் மதகுருக்களும்.
    3) நேர்மையற்ற அனைத்து பணியாளர்களும்.
    4) கல்வியில் அரசியல் செய்கின்ற ஆட்சியாளர்கள்.
    5) கடமை உணர்ச்சியும் மனசாட்சியும் அற்ற ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள்.
    6) உண்மையான பாசம் இல்லாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்.
    7) பணியை வியாபார நோக்கோடும், சுயநலத்தோடும் செய்கின்ற பத்திரிக்கையாளர்கள். இன்னும் பல......
    குழந்தைகளை சிறுவயதுமுதலே முறையாக வளர்த்து, சரியான கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுத்தால், அவர்களை அடித்து வளர்க்கவேண்டும் என்பது அவசியம் இல்லை. நன்றாகவே வளர்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்வில் முன்னேறியவர்களில் மேறகண்ட துன்பத்தை அனுபவித்தவர்களே தாய்,தந்தை சொல் கேளாம் நல்லாசிரியர் சொல் கேட்டும் சிறந்தவர்கள் பலர் இவ்வையத்தில்.

      Delete
    2. I accepted. What is the most of the students status. They scold good teachers. If I give some work they will scold me. It is the ground reality.They appreciate the bad teachers. (Here bad teachers means they are chatting with students for other than subject matters). They get also salary. They advised me not to concentrate lot. They are placards. Why do waste our energy. But I am not bothered. I give my maximum to those students who also scold me. Government or Headmaster do n't support teachers.Sometimes I think why i did select this profession. O.K. We will give our best. Time will tell.

      Delete
  5. The male students are not interested in studies. They come to school. They want to play, speak, shout and go. They do n't hear the words of teachers. They are funny humans. 90 percent of students are funny. They do n't want to read even small questions. During exam they ask the answers from the nearby students. What a funny boys. Their future is????????????!!!!!!!!!!!!!! God will save them.

    ReplyDelete
  6. I am working in a CBSE school. What Mr. Manickam said is very very true. Now a days boys are not interested in studies. They don't like to read or write. They don't listen whatever we say. I used to advise them daily. I tell moral stories everyday. It is just a fun for them. But I find girls are interested in reading and writing. But when we give project work boys like to do electrical work and mechanical work and they do something for our science exhibition. But girls are not interested in these things. What I feel is our education system should change. Are we giving the valuable education to our children ?. Will it be useful for their future? Our exams are testing only the memory power not the thinking skill. Children started using computer, tablet, mobile etc. They are not interested in studies. They are diverted very much. It is very hard to bring their attention to the subject matter. Hereafter it will be a challenge for the teachers. For each chapter we are doing activities. But still they are not much interested in learning and writing. If the CBSE students are like this what shall we say about the Govt. school students? Our method of education should change. It should create interest among the students and it should not be boring. Boys should be given hands on training(mechanical, electrical , electronical etc.) They are good in these activities. If one can read a whole book without understanding the meaning and he is able to reproduce it as such and gets full marks can we say he is intelligent? What we learn should be applicable in our daily life.

    Now a days they don't have discipline. It is very difficult to inculcate good habits in them. For example I used to tell them to arrange their desks and benches everyday. If I don't say they won't arrange. All the teachers in our school are fed up now. For the past two years the behaviour of the students are going down. I am very much worried about the future generation.

    Can anybody suggest some ideas to make them discipline? If one has good discipline he can learn everything easily. How can the teachers bring their attention to studies?

    ReplyDelete
  7. *"கல்வியின் நிலை"!...

    அன்று:

    1947-12% கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு (மனிதநேயம்,அடுத்தவரை மதித்தல்,
    நேசித்தல்) இருந்தது. ("value education") மூலம்......
    பொது நலம் வளர்ந்தது....

    இன்று:

    2014-82% கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கை அதிகம் (மனிதநேயம்,அடுத்தவரை மதித்தல்,நேசித்தல்)என்பது கேள்விக்குறியாக மாறியது....("education is value") என்ற நிலை மாறியதால் சுயநலம் வளர்கிறது...

    நாளை:
    இந்த அவல நிலை!???.....
    nice article....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive