சென்னை சூளையை சேர்ந்தவர் வக்கீல் டி.சித்ராதேவி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது,-மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்திய ஆய்வின்படி, 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமையால்
பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
பெண் குழந்தைகள் பள்ளி, வீடு மற்றும் தெருக்களில் பல்வேறு விதமான பாலியல் கொடுமைக்கு உள்ளாகுகின்றனர். இந்த கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த கொடுமையில் குழந்தைகள் சிக்காமல் இருக்க, பள்ளி பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான விவரங்கள், பாடங்கள், சித்தரங்கள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து பரிந்துரைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த பரிந்துரைகளை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும் என்றும் பள்ளிப் பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 1–ந்தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கோரிக்கை மனு அனுப்பினேன். இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்து, மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்துக்குள் பரிசீலக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்கள்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...