Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பின்னேற்ப்பு வழங்க வாய்ப்பு !!!

         நமது SSTA மாநில அமைப்பாளர்கள், 13.10.2014 அன்று தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களைச் சந்தித்ததன் விபரம்...

1. விலைமதிப்பில்லா இலவசப்பொருட்கள் வழங்குவதில் உள்ள சில  பிரச்சினைகள் குறித்து விளக்கப்பட்டது. குறிப்பாக பெண் தலைமை ஆசிரியர்களுக்கு பொருட்களை ஒவ்வொரு முறையும் தனித்தனியாக எடுத்துச்செல்லுவதில் ஏற்படும் சிரமம் குறித்து விவரித்து கூறப்பட்டது. மேலும் மாணவர்களின் கல்விப்பணி வெகுவாக  பாதிக்கப்படுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அக்குறைகளைக் களைவது பொருட்டு,


அப்பொருட்களை நேரடியாகப் பள்ளிகளில் இறக்குதல் அல்லது ஒரே நேரத்தில் எல்லா பொருட்களையும் வழங்கிட வேண்டும்  என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு குறைகளைக் களையும் பொருட்டு பதிலளித்த இயக்குனர் அவர்கள்  மாவட்டம் அல்லது ஒன்றியம் வாரியாக பொருட்கள் வழங்கிட ஏதுவாக கிட்டங்கிகள் அமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.

2. இயக்குனரின் உத்தரவுப்படி ஊக்க ஊதிய உயர்வு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 023458/இ1/2014, நாள் : 2.8.2014 ன்படி முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியத்தை மறுக்கவும், பெற்ற ஊக்க ஊதியத்தை  திரும்பப்பெறவும், பதவி உயர்வு பட்டியலில் இருந்து இறக்கம் செய்யவும் மேலும் பதவி உயர்வு பெற்றிருந்தால் அப்பதவியிலிருந்து பதவி இறக்கம் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2012 & 2014ல் பணி நியமனம் செய்யப்பட்ட TET appointment ஆசிரியர்கள் பணியில் சேரும் முன் பயின்ற உயர்கல்விக்கு பின் அனுமதி பெற வேண்டி உள்ளது. எனவே உத்தரவில் உள்ள  சிக்கல்களை உடனடியாக பாதிப்பில்லாத வகையில் நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் அவர்கள் அனேகமாக 2007 முதல் 2014 வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்கவும் இனி வரும் காலங்களில் அது சம்பந்தமான  முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

3. CRC Training சம்பந்தமான சிறப்பு தற்செயல் விடுப்பினை அனைத்து  தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்கி அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

4. தீபாவளிப் பண்டிகை ஒட்டி ஏதேனும் ஒரு நாள் விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் அவர்கள் சூழ்நிலை காரணமாக  வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக விடுமுறை அளிக்க உத்தரவிடுவதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட DEEO அவர்களைத் தொடர்புகொண்டு கோரிக்கை வைக்குமாறும் தெரிவித்தார்.மேலும்  தாங்கள் DEEOக்களை அணுகி   உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிசீலிக்க சொல்வதாகவும்  தெரிவித்தார்.

என்றும் ஆசிரியர்களுக்கான பணியில் SSTA...




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive