பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக்கு, அமைச்சகத்தின் சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் நடந்ததாக தாக்கலான வழக்கில் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பரமக்குடி சாந்தி தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் பழாச்சிறை நடுநிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக உள்ளேன். நவ.,1ல் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றேன். பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் விடுதி காப்பாளர் பணிக்கு மாறுதல் கோரினேன். எனக்கு பணி மூப்பு உள்ளது.
ஆனால், அதே இடத்திற்கு சித்ரா என்பவரை முன்தேதியிட்டு அக்.,24ல் இடமாறுதல் செய்து இயக்குனர் உத்தரவிட்டார். அரசாணைப்படி, கவுன்சிலிங்கிற்கு பின்தான் இடமாறுதல் மேற்கொள்ள வேண்டும். பேக்ஸ் மூலம் அனுப்பிய உத்தரவில் இயக்குனர் கையெழுத்திடவில்லை. சித்ராவை உடனே பணியில் சேரும்படி கூறினர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சக சிபாரிசின்பேரில் இவ்வாறு செய்துள்ளனர். இது விதிகள், வழிகாட்டுதல், அரசு உத்தரவிற்கு எதிரானது. அதை ரத்து செய்து, என்னை பரமக்குடி விடுதிக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பரமக்குடி கமலாதேவி மனுவில், 'பரமக்குடி ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி காப்பாளராக பணிபுரிந்தேன். சித்ராவிற்கு சலுகை காட்டும் நோக்கில், அக்.,24ல் பாம்புவிழுந்தான் ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளிக்கு மாறுதல் செய்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என கூறியிருந்தார்.
நீதிபதி டி.ராஜா மனுவை விசாரித்தார். மனுதாரர் வக்கீல்கள் ஆனந்த், தாளை முத்தரசு ஆஜராகினர். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ.,19 க்கு ஒத்திவைத்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...