'தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே. தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களை விட, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு, பணி நியமனத்தின் போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற, கோரிக்கையை ஏற்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சம அளவில்:
கடந்த, 2012ல், தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், 'தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர்' என, தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியரும், சம அளவில், அரசுப் பணி நியமனம் பெற வழி வகை செய்யப்பட்டது. தமிழக அரசின், இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, செவிலியர்களை நியமனம் செய்யும் போது, அரசு நர்சிங் கல்லூரிகளில் படித்த மாணவியருக்கு மட்டுமே, முன்னுரிமை வழங்கினால், அது, மற்ற துறைகளின் நியமனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
குழப்பம் ஏற்படும்:
நர்சிங் மாணவியர் கேட்பது போல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள், தங்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் வேலை தர வேண்டும் என்றும், அரசு சட்டக் கல்லூரியில் படித்தவர்கள், தாங்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும் என்றும் கேட்க ஆரம்பித்தால், குழப்பம் தான் ஏற்படும். அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர ஆரம்பித்தால், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம், வேலைவாய்ப்புக்கு எங்கே போவது என்ற நிலையும் உருவாகும். எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான செவிலியர் பணி நியமனங்களின் போது, அரசு நர்சிங் கல்லூரிகளின் மாணவியருக்கே, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகள் என, இரண்டையும் சமமாகவே கருத முடியும். அரசு பணி நியமனங்களின் போது, இரு தரப்பினருக்கும், சமமான வாய்ப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர்:
வழக்கு விசாரணையின் போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்: தனியார் கல்லூரிகளில், எளிதாக இடம் கிடைத்து விடுகிறது. ஆனால், அரசு நர்சிங் கல்லூரிகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெற்று, மிகுந்த சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், அரசு நர்சிங் கல்லூரிகளில் படிப்பவர்களே, அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் சென்று பணிபுரிகின்றனர். அதனால், அதிக அளவில் பயிற்சி பெற்று, கூடுதல் தகுதிகளுடன் இருக்கின்றனர். நர்சிங் பயிற்சியின் போதே, அரசுக்காக வேலை செய்து, அரசோடு சேர்ந்து செயல்படுகின்றனர். எனவே, அரசு பணி நியமனங்களின் போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் வாதிட்டார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...