Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் வீடுகளில் தான் நடக்கின்றன: ஆய்வில் தகவல்

           அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பெண்கள் அவர்களது வீட்டில் தான் அதிக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

             பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், கணவர் மற்றும் உறவினர்களால் அனுபவிக்கும் கொடுமை 38 சதவிகிதம் அளவிலும், பெண்களின் தன்மானத்தை தாக்கும் வகையில் நடந்துகொள்வது 23 சதவிகிதம் ஆகவும், கடத்தல், கற்பழிப்பு போன்ற குற்றங்கள் முறையே 17 சதவிகிதம் மற்றும் 11 சதவிகிதம் ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
           மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள 'இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2014' என்னும் பதிப்பில், 2012 ஆண்டை விட 2013 ஆம் ஆண்டில், 'பெண்கள் அநாகரீகமான பிரதிநிதித்துவப்படுத்துவது' தொடர்பான புகார்கள் 157 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
           எனினும், 2013 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களின் தண்டனை விகிதம் மிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் கற்பழிப்பு, வரதட்சணை சார்ந்த கொலை வழக்குகளின் தண்டனை விகிதம் 4.4 சதவிகிதம் ஆகவும், கடத்தல் போன்ற குற்றங்களின் தண்டனை விகிதம் வெறும் 2.5 சதவிகிதம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive