செல்போனோ, ஸ்மார்ட்போனோ பேட்டரி எப்போதும் சார்ஜ் செய்யப்பட்டதாக இருப்பது
முக்கியமானது. ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் தவிக்கும் அனுபவம்
(அவஸ்தை) எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது.
பேட்டரியின்
ஆற்றலுக்கு வரம்பு இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பேட்டரியின்
ஆயுளையும், அதன் சார்ஜிங் ஆற்றலையும் அதிகரிக்கலாம். இதற்கான ஐந்து எளிய
வழிகளை கிஸ்மோடோ தொழில்நுட்பத் தளம் அடையாளம் காட்டியுள்ளது.
அவை:
1. வெப்பநிலை உங்கள் பேட்டரியைப் பாதிக்கலாம். போனைக் கூடுமானவரை சூரிய
ஒளியில் நேரடியாகப் படும்படி வைப்பதைத் தவிர்க்கவும். இது குளிருக்கும்
பொருந்தும்.
2. பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்வது நல்லது. ஆனால், உண்மையில் முழு
சார்ஜ் செய்யாமல் பகுதி அளவு சார்ஜ் செய்வது ஏற்றது என வல்லுநர்கள்
சொல்கின்றனர். பகுதி அளவு என்றால்? அதற்கு ஒரு பார்முலா சொல்கின்றனர்.
40-80 சதவீதம் வரை சார்ஜில் இருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது, சார்ஜ்
40 சதவீதம் வந்ததும், மீண்டும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள
வேண்டும். ஆனால், வேலை அதிகம் அல்லது வெளியூர் செல்வதாக இருந்தால் 100
சதவீதம் சார்ஜ் செய்து கொள்வதே சரியாக இருக்கும்.
3. சார்ஜிங்கில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், முழுவதும் சார்ஜான பிறகு
பிளக் செய்யப்பட்ட நிலையிலேயே விடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக சார்ஜ்
ஆவதும் பேட்டரியைப் பாதிக்கும்.
4. அதே போல அதிவிரைவு சார்ஜர் மற்றும் போலி சார்ஜர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.
5. போனை பயன்படுத்தும்போது மட்டும் அல்ல சுவிட்ச் ஆப் செய்யும்போது
சார்ஜைக் கவனிக்க வேண்டும். சுவிட்ச் ஆப் செய்யும் நிலை ஏற்பட்டால் 50
சதவீதம் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லாம் சுலபமான வழிகளாகத் தான் இருக்கிறது அல்லவா? குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
thanks for this news.
ReplyDelete