மாத ஓய்வூதியம், பணி
நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு
காணும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய
திட்டம் அமலுக்கு வந்த, 2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி
ஆண்டின் பாதியில், ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதிவரை,
பணியில் தொடரலாம். ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன
காலத்திலும் வழங்கப்படும் என அத்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் பலன்கள்
மொத்தம், 40
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலன் அடைவர். ஒரு கல்வி ஆண்டான, ஜூன்
முதல், மே வரையிலான, எந்த மாதத்தில் ஆசிரியர் ஓய்வு வயதை எட்டினாலும்,
மாணவர் நலனை கருத்தில் கொண்டு, அந்த ஆசிரியர், அந்த கல்வி ஆண்டு முழுவதும்,
வேலையில் இருக்க அரசு அனுமதித்துள்ளது.
ஓய்வு பெறும்போது,
என்ன சம்பளம் வாங்கினாரோ, அதே சம்பளம், அந்த கல்வி ஆண்டு முடியும் வரை பெற
முடியும். பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பை, தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் வரவேற்றுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...