தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை
வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங்
சவுகான், நாட்டின் முதல் ஷிரமோதயா பள்ளிக்கான அடிக்கலை நாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இப்பள்ளியின்
பெயர் தீன்தயாள் ஷிரமோதயா வித்யாலயா என்பதாக இருக்கும். இப்பள்ளியில், 6ம்
வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.
மொத்தம் 1120 மாணவர்கள் வரை சேர்க்கும்
கொள்ளளவுக் கொண்ட இப்பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளிகளின் அடிப்படையில்
மேம்படுத்தப்படும். இப்பள்ளி, ஆங்கில மீடியம் பள்ளியாக செயல்படும்.
இப்பள்ளியின் 60% இடங்கள், தொழிலாளர்கள்
மற்றும் விவசாயிகளின் குழந்தைகளின் மூலம் நிரப்பப்பட்டு, மீதமுள்ள 40%
இடங்கள், உள்ளூர் மக்களுக்கு திறந்துவிடப்படும். தற்போது தலைநகர் போபால்
அருகில் திறக்கப்பட்டுள்ள இப்பள்ளி, பின்னாட்களில், இந்தூர், ஜபல்பூர்
மற்றும் குவாலியர் ஆகிய இடங்களிலும் துவக்கப்படும்.
பணத்தின் காரணமாக, யாருக்கும் தரமான கல்வியானது
தடைபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தின் பொருட்டே, ஷிரமோதயா பள்ளிகள்
துவக்கப்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...