பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வில் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக இவ்வகுப்புகளில்
காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் (மெல்லக்கற்கும் மாணவர்கள்)
கண்டறியப்பட்டு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாட வாரியாக கற்பிக்க,
சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாணவர்களிடம் வழங்கி
பயிற்சியளிக்கப்படும். மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த
சிறப்பு கையேட்டில் முக்கிய வினாக்கள், அதற்கான விடைகள் இடம் பெற்றுள்ளன.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம்
மெல்லக்கற்கும் மாணவர்களிடம் இவை வழங்கப்படும். இதன்மூலம் அரையாண்டு,
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் பெறலாம்,” என்றார்.
எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் 100,110 என மாணவர்கள் உள்ளனர். வகுப்பறையில் அவர்கள் வசதியாக நோட்டுபுத்தகங்களை வைத்து அமர்ந்து பாடம் கவணிப்பதற்கே இடமில்லை. ஆசிரியர் கரும்பலகையில் எழுதும்போதே அதை உற்று நோக்கும் அளவிற்கு வகுப்பறையின் அமைப்பு இல்லை. தலைமை ஆசிரியரோ, மற்ற அதிகாரிகளோ அதைப்பற்றி கவலைபடுவதில்லை. ஆண்டுமுழுவதும் மாணவர்களை அழித்துவிட்டு, பொதுத்தேர்வில் மட்டும் முழு தேர்ச்சி பெற்றுவிடவேண்டும் என ஆசைப்படுவது என்ன நியாயம்? மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொரு ஆண்டும் முக்கியம்.
ReplyDelete