பாதுகாப்பு விதிகளை, பள்ளிகளில் செயல்படுத்த, போதுமான நிதி இல்லாததால், கல்வி கட்டணத்தில், கூடுதலாக வசூலிக்க, கல்வி அமைச்சர் கிம்மனே ரத்னாகரிடம், தனியார் பள்ளிகள் அனுமதி கோரி, மனு கொடுத்துள்ளன.
பெங்களூருவில், சில, தனியார் பள்ளிகளில் நடந்த சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தினால், பல பகுதிகளில், பெற்றோரும், சமூக அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இச்சம்பவங்களை தடுக்க, போலீஸ் மற்றும் கல்வி துறை, ஒன்பது விதிமுறைகளை செயல்படுத்த பள்ளிகளுக்கு உத்தரவிட்டதுடன், கால அவகாசமும் அளித்தது. அரசு பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகளை செயல்படுத்தாததை சுட்டி காட்டி, தங்களுக்கும் விலக்கு அளிக்கும் படியும், கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், தனியார் பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிமன்றம், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என, வித்தியாசம் பாராமல், பாதுகாப்பு விதிமுறைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கால அவகாசம் கேட்பதால், குற்றங்கள் மேலும் அதிகரிக்கும்.
ஜி.பி.எஸ்., கருவி : பாதுகாப்பு விதிகளை செயல்படுத்தாத பள்ளிகள் மீது, போலீஸ் துறையும், பொது உத்தரவு துறையும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, ??? கல்வி நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்பதால், பாதுகாப்பு விதிகளின்படி, சி.சி.டி.வி., கேமராக்கள், பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி, கூடுதல் செக்யூரிட்டிகள் நியமிக்க வேண்டும்.
சில, தனியார் பள்ளிகளில், போதுமான நிதி இல்லாததால், மாணவர் கல்வி கட்டணத்தில் டுதலாக வசூலிக்க அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, அமைச்சர் கிம்மனே ரத்னாகரிடம், கர்நாடக மாநில தனியார் பள்ளி நிர்வாக அமைப்பு கொடுத்துள்ளது.
பள்ளி நிர்வாக அமைப்பு ஒருங்கிணைப்பு செயலர் சசிகுமார் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், 200 முதல், 500 மாணவர்கள் உள்ளனர். இவர்
களுக்கு, தரமான கல்வி வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சி.சி.டி.வி., கேமராக்கள், ஜி.பி.எஸ்.,
கருவிகள் அமைக்க, கூடுதல் செலவாகும். இவைகளை கண்காணிக்க, கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு விதிகளை செயல்படுத்த மாதந்தோறும், கூடுதலாக, இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும்.
அனுமதியளிக்க வேண்டும்
அரசு பள்ளிகளில், பாதுகாப்பு விதிகளை செயல்படுத்த, கோடிக்கணக்கான ரூபாயை செலவிடும் அரசு, தனியார் பள்ளிகளில், பாதுகாப்பு விதிகளை செயல்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்க, நிதி பற்றாக்குறையுள்ள, பள்ளி நிர்வாகங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோருக்கு கூடுதல் சுமை
பொது உத்தரவு துறை அதிகாரிகள் கூறுகையில், 'கல்வி கட்டணத்தை உயர்த்த, அனுமதி கேட்பது நியாயமானதல்ல. பாதுகாப்பு விதிகளுக்காக, மேற்கொள்ளப்படும் பணிகள், ஒரு முறை செலவழிக்கப்படும் முதலீடு ஆகும். இதற்காக, மாதந்தோறும், பெற்றோருக்கு கூடுதல் சுமையை கொடுப்பது சரியல்ல' என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...