முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத்
தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டது.
சென்னையில்?..
சென்னை மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில்
உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின் விலை ரூ.50
ஆகும்.
இந்த வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!
ReplyDelete