கும்பகோணம் பள்ளி தீ
விபத்தில் 94 குழந்தைகள் பலியானதில், கீழ் கோர்ட் விதித்த தண்டனையை ரத்து
செய்யக்கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் 565 பக்க சான்றாவணங்களை தாக்கல்
செய்தனர்.கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16 ல்
தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். 18 பேர்
காயமடைந்தனர்.
பள்ளி நிறுவனர்
புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை
சாந்தலட்சுமி, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, துவக்கக் கல்வி
அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன் உட்பட 8 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல்
தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட் ஜூலை 30 ல் உத்தரவிட்டது. இதை ரத்து
செய்யக்கோரி புலவர் பழனிச்சாமி, சரஸ்வதி, சாந்தலட்சுமி, பாலாஜி, தாண்டவன்,
மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட
துவக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
செய்தனர். முன்னாள் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக்
கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட 11 பேரை கீழ் கோர்ட் விடுதலை செய்தது. இதை
எதிர்த்து அரசுத் தரப்பில், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் ராமேஷ் ஆஜரானார். கீழ்கோர்ட்டின் 565
பக்க சான்றாவணங்கள், 18 சான்றாவண பொருட்களை அரசுத் தரப்பில் தாக்கல்
செய்தனர். விசாரணையை டிச.,12 க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...