Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி!?

           விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

           விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் பாத்திமாகனி(35). இவர் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர்-பத்மசுந்தரி தம்பதியினர் இவரை அணுகியுள்ளனர். இதற்கு குறிப்பிட்ட அளவு தொகை செலவு ஆகும் என்றும், அதை வங்கியில் வைப்பாக செலுத்தினால் போதும் என  தெரிவித்தார்களாம். இதை உண்மையென நம்பிய பாத்திமாகனி கடந்த 15.11.2011 அன்றைய நாளில் இருந்து தேசிய வங்கி கிளையில் பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சம் வைப்பாக செலுத்தினாராம். இந்நிலையில், குறிப்பிட்ட நாள்கள் கடந்த நிலையிலும் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளனர். இதையடுத்து, தம்பதியினர் மீது சந்தேகம் அடைந்த பாத்திமாகனி வைப்பாக செலுத்திய வங்கி கிளையை அணுகி விசாரணை செய்ததில் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாத்திமாகனி புகார் செய்தார். அதன் அடிப்படையில்  தம்பதியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிதது வருகின்றனர்.   




4 Comments:

  1. லஞ்சம் கொடுத்த இவரை முதலில் கைது செய்ய வேண்டும். வருமான வரி செலுத்தினாரா என்று விசாரணை செய்யுங்கள்.

    ReplyDelete
  2. Good nanpare lanjam kodutthavaraum arrest pannanum

    ReplyDelete
  3. Tet pass aganum gov velai tharathu peragu kasukoduthuthan aided schoolku ponum

    ReplyDelete
  4. Don't worry baskar brother next tet lab athika mark edunga

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive