அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளில் சேர, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 7,500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புபவர்கள், போக்குவரத்து கழக அலுவலகங்களில், நவ., 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற வேண்டும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அலுவலகங்களில் டிச., 8ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. கடந்த, 12 நாட்களாக, போக்குவரத்து கழக அலுவலகங்களில் விண்ணப்பதாரர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எட்டு போக்குவரத்து கழகங்களுக்கும், நேற்றைய நிலவரப்படி, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வரும், 21ம் தேதி தான், மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை தெரிய வரும். அதன் பின், தேர்வு செய்யும் பணி துவங்கும் ' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...