அரசுப்
போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்
உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். அரசுப்
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்,
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய
காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 746 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 610 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதேபோல், தமிழ்நாடு
அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தில் 899 சேம ஓட்டுநர், 702 சேம
நடத்துநர் பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 259 சேம ஓட்டுநர்
பணியிடங்களும், 409 சேம நடத்துநர் பணியிடங்களும், கும்பகோணம் மண்டலத்தில்
181 சேம ஓட்டுநர், 37 சேம நடத்துநர் பணியிடங்களும், விழுப்புரம்
மண்டலத்தில் 256 சேம ஓட்டுநர், 295 சேம நடத்துநர் பணியிடங்களும்,
திருநெல்வேலி மண்டலத்தில் 280 சேம ஓட்டுநர், 278 சேம நடத்துநர்
பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதுதவிர, இளநிலை
தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் காலிப்
பணியிடங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் சேர
விரும்புபவர்கள் அந்தந்த போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் நவம்பர் 20-ஆம்
தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த
விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 8-ஆம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pls post the qualification of all require post..................
ReplyDeletehow many posts In salem block & post qualifications mr.padasalai
ReplyDeleteWhich site has been published this announcement pls tell me
ReplyDeleteWhat is the qualification and age of limit
ReplyDeleteஅங்கன்வாடி பணியிடங்கள் பற்றி அறிவிப்பு வந்திருந்தால் தயவு செய்து வெளியிடவும்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதயவு செய்து மற்ற வலைதளங்களின் செய்திகளை வலைதள பெயருடன் நமது வலைதளத்தில் வெளியிடுவதை தவிர்க்குமாறு திரு. முருகவேல் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
Delete