தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத்
திறன் போட்டி டிசம்பர் 7-ஆம்
தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் திங்கள்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
இந்தப்
போட்டியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு
வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். டிசம்பர் 7-ஆம் தேதி கோட்டூர்புரத்தில்
உள்ள பெரியர் தொழில் நுட்ப
மையத்தில் காலை 11 மணிக்கு தேர்வு
நடைபெறும்.
தேர்வில்
பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பெயர்களை
பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும்
விவரங்களுக்கு
044-24410025 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...