வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால், நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கி உள்ளது. 8 கோடி காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன.
ஒரு நாள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் 8 ஆயிரத்து 800 கிளைகள் உள்பட இந்தியா முழுவதும் 85 ஆயிரம் வங்கி கிளைகளில் பணிபுரியும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.எம்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கண்டன உரையாற்றினார்.
ரூ.70 ஆயிரம் கோடி வராக்கடன்
ஆர்ப்பாட்டத்தின் போது சி.எம்.பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்ற நிதியாண்டு, வங்கிகளின் மொத்த லாபம் 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில், 70 ஆயிரம் கோடி ரூபாயை வராக்கடன் என ஒதுக்கி வைத்து விட்டு, 50 ஆயிரம் கோடியை நிகர லாபமாக காண்பிக்கிறார்கள்.
இந்த வராக்கடன் என்பது, உயர் மட்டங்களின் வழியாக பெரும் தொழில் அதிபர்களுக்கு வழங்கப்படுவதாகும். இதற்கும் ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனை காரணம் காட்டி, எங்களின் ஊதிய உயர்வை குறைப்பது முறையல்ல. எனவே, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
8 கோடி காசோலைகள் தேக்கம்
ஆர்ப்பாட்டத்தின் போது, சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியா முழுவதும், ஊதிய உயர்வு, பணி முறை மாற்றங்கள் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, இந்திய அளவில், 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனைக்கான 8 கோடி காசோலைகள் முடங்கி தேங்கி கிடக்கின்றன.
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை போடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2012 நவம்பர் மாதம் புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை.
தொடர் வேலை நிறுத்தம்
மேலும், தற்போது 11 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே அளிக்க வங்கிகளின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை 25 சதவீதமாக உயர்த்தி அளிக்க வேண்டும். இல்லை என்றால் வருகிற டிசம்பர் 2 முதல் 5–ந் தேதி வரை, 4 மண்டலங்களாக பிரிந்து, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மண்டலத்திலும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு தொடர் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்படும். அதன் பிறகும், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றால், தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் ரவிகுமார், துணை பொதுச் செயலாளர் எம்.சண்முகம், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் வர்கீஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...