பல
தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிகையிலேயே மாணவர்கள் படிக்கின்றனர்.
சேர்க்கையை அதிகரிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில வழிக்
கல்விமுறையும் கைகொடுக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்கள்
எண்ணிக்கையை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறை
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக காலணியில் தொடங்கி
நோட்டுப்புத்தகம், சீருடை, கல்வி உபகரணபெட்டி, உலக வரைபட புத்தகம், மதிய
உணவு என 15க்கும் மேற்பட்ட இலவச திட்டங்களை வழங்கி வருகிறது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமுறையும்
அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க சிறப்பு பிரசார
இயக்கங்களும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும்
பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் பலவற்றின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.
கிராமப்பகுதிகளில் மட்டுமின்றி மாநகர, நகரபகுதிகளில் உள்ள சில
தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வதற்குப் பதிலாக குறைந்து
வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக நெல்லை மாநகர பகுதி எல்லைக்குள் உள்ள சில தொடக்கப் பள்ளிகள்
மாணவர்களின்றி வெறிச்சோடி வருகின்றன. பாளை வட்டார அளவில் உள்ள சில
பள்ளிகளில் இதை கண்கூடாகக் காணமுடிகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை
கற்றுத்தரப்படும் ஒரு தொடக்கப்பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையே ஏழு
மட்டும் தான். இதில் தினமும் 3 பேராவது விடுப்பு எடுக்கின்றனர்.
எஞ்சிய 4 மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக இப்பள்ளியில் ஒரு தலைமை
ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் உள்ளனர். மேலும் இந்த 4 பேருக்கும் மதிய
உணவு தயாரித்து வழங்க சத்துணவு ஊழியர் மற்றும் ஒரு உதவியாளரும் பணி
புரிகின்றனர்.
இதேபோல் மற்றொரு பள்ளியில் 9 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 7 மாணவர்கள்
வகுப்புக்கு வருவதே அரிதாக உள்ளது. இங்கும் 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
பாளை புறநகரில் மற்றொரு பள்ளியின் வருகை பதிவேட்டில் மாணவர்களின்
எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.
பாளை. மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல வட்டாரங்களில் இருக்கும் தொடக்க
பள்ளிகளில் இந்த நிலையே காணப்படுகிறது. இதுபோல் மாநிலம் முழுவதும் குறைந்த
எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் பல இருப்பதாக கல்வியாளர்கள்
கூறுகின்றனர். மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக அரசால் அறிமுகம்
செய்யப்பட்ட ஆங்கிலவழிக்கல்வி முறையும் எடுபடவில்லை. இதனால் மாணவர்களுக்கு
தமிழ்வழியிலேயே பாடம் நடத்தப்படுகிறது.
இது குறித்து கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
சில தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது
உண்மைதான். இலவச திட்டங்களை அள்ளி வழங்கினாலும் பெற்றோர் மத்தியில் தனியார்
பள்ளிகள் மீதான மோகம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.
தனியார் பள்ளிகளின் சீருடை அமைப்பு, அங்கு கூடுதலாக கற்றுத்தரப்படும்
கல்வி, விளையாட்டுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் போன்றவை பெற்றோரை
கவர்கிறது. சாதாரண கூலி தொழிலாளிகூட தன் மகன், மகளை வசதிக்கு ஏற்ப ஏதாவது
ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைக்கவே விரும்புகிறார். மேலும் அரசுப்
பள்ளிகளில் கடந்த 2 வருடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில
வழிக்கல்வியும் முழுமையாக நடைபெறவில்லை. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி
அளிக்காததே இதற்கு காரணம்.
மாணவர் அதிகம் ஆசிரியர் குறைவு
இதுகுறித்து அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஈராசிரியர் பள்ளியில் தற்செயல்விடுப்பு, இலவச திட்டங்களை எடுத்து வர
செல்லுதல், அனைவருக்கும் கல்வித்திட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது,
மருத்துவ விடுப்பு போன்ற பல காரணங்களால் 220 முழு வேலை நாட்கள் பணி செய்ய
வேண்டிய நிலையில் இரண்டு ஆசிரியர்களும் 165 நாட்களுக்கும் குறைவாகவே பணிகளை
கவனிக்கின்றனர்.
1 முதல் 5ம் வகுப்புவரை பாடம் நடத்த வேண்டிய நிலையில் இதர பணிகளை இவர்கள்
கவனிப்பதால் பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கையின்மையை
ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் 140க்கும் அதிகமாக மாணவர்கள் பயிலும்
தொடக்கப்பள்ளிகளும் இருக்கின்றன. இங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.
மொத்தமே 4 ஆசிரியர்களை கொண்டு சமாளிக்கின்றனர். இதில் ஒருவர் மருத்துவ
விடுப்பில் செல்லும்போது 3 ஆசிரியர்களே 140க்கும் மேற்பட்ட மாணவர்களை
கவனிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே
மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் தடுக்கப்படுவதுடன் தனியார் பள்ளிகளை
புறந்தள்ளி முன்னேற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் பள்ளிகளின் சீருடை அமைப்பு, அங்கு கூடுதலாக கற்றுத்தரப்படும்
கல்வி, விளையாட்டுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் போன்றவை பெற்றோரை
கவர்கிறது. சாதாரண கூலி தொழிலாளிகூட தன் மகன், மகளை வசதிக்கு ஏற்ப ஏதாவது
ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைக்கவே விரும்புகிறார். மேலும் அரசுப்
பள்ளிகளில் கடந்த 2 வருடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில
வழிக்கல்வியும் முழுமையாக நடைபெறவில்லை. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி
அளிக்காததே இதற்கு காரணம்.
மேலும் சில பகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை மிகவும் உள்ளது. உதாரணமாக
மாநகர எல்லைக்குள் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் 120
குடியிருப்புகள் உள்ளன. விவசாயத்தை நம்பி உள்ள இப்பகுதியில் 1 முதல் 5
வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 35 ஆகும். இதில் 25 பேர் மாநகர
பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர்.
மீதம் உள்ள 10 மாணவர்களுக்காக மட்டுமே இப்பகுதியில் உள்ள பள்ளி
இயங்குகிறது. அதுவும் அந்த கிராமத்தில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் அனைத்து
மாணவர்களும் விடுப்பு எடுக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாளை. அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி. இங்கு 4
மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு பாடம் சொல்லிக்
கொடுக்க 2 ஆசிரியைகள் பணியில் இருப்பது தான் வேடிக்கை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...