நிலக்கோட்டை அருகே பள்ளிக்கூடத்தில் நேற்று பிளஸ்-1 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து சக மாணவரை போலீசார் கைது செய்தனர். பிளஸ்-1 மாணவன்திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டியில் கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் அதே பகுதியில் உள்ள எத்திலோடு காலனியை சேர்ந்த ஆசையன் என்பவரது மகன் வினோத் (வயது 16) பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கும் இவருடன் படிக்கும் முத்தலாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பள்ளியில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதில் வினோத்தை அந்த மாணவன் தாக்கினார். இதனால் நேற்று முன்தினம் வினோத் பள்ளிக்கு வரவில்லை. நேற்று காலையில் அவர்கள் 2 பேரும் பள்ளிக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வகுப்புகள் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் காலை 11 மணியளவில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. அப்போது வினோத் தனது நண்பர்களுடன் வகுப்பறையை விட்டு வெளியே வந்தார். சுயநினைவு இழந்தார்பள்ளி மைதானத்தில் அவர் வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்தலாபுரத்தை சேர்ந்த மாணவனுக்கும், வினோத்துக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்த மாணவர், வினோத் தலையின் பின்பக்கத்தில் தனது கையால் ஓங்கி அடித்துள்ளார். உடனே வினோத் சுயநினைவு இழந்து கீழே சரிந்தார். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது வினோத் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் தூக்கிச் சென்று, அவருக்கு சுயநினைவு ஏற்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அது முடியாமல் போனது. இதனால் சம்பவம் குறித்து வினோத்தின் தந்தை ஆசையனுக்கு தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்தார். இதனால் பதறியடித்து பள்ளிக்¢கு வந்த வினோத்தின் பெற்றோர் அவரை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்¢கு தூக்¢கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக¢டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள். பின்னர் அவர் உடல் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை வழக்குஇந்த சம்பவம் குறித்து ஆசையன் கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கொலை வழக்குப்பதிவு செய்து முத்தலாபுரத்தை சேர்ந்த மாணவரை கைது செய்தார். மாணவர் இறந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை, நிலக¢கோட்டை தாசில்தார் மோகன் ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மாணவர் இறந்த தகவல் கேட்டு அவரது உறவினர்கள் பள்ளி வளாகம், நிலக¢கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையம் முன்பாக குவிந்தனர். இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிலக¢கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி, இன்ஸ்பெக¢டர் சுரேஷ் தலைமையில் 50-க¢கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர் கொலையான சம்பவம் நிலக்¢கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் என்னசெய்தாலும் ஆசிரியர் அவர்களைக் கண்டிக்கக்கூடாது என்று அரசு கூறுகிறது. மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். ஆகவேகண்டிக்கக்கூடாது !எதிர்கால சமுதாயம் சீரழிகிறது!
ReplyDeleteமாணவர்கள் செயல்கள் தற்போது மிகவும் மாறிவிட்டது. இனி அவர்களைத் திருத்தவே முடியாது எனத் தோன்றுகிறது. நானும் ஒரு ஆசிரியர். 30 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் மனசாட்சிப் படி முழுமையாக, தொய்வில்லாமல் செய்து வருகிறேன். இதற்குக் காரணம் நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியாற்றுவது தான். என்னிடம் பயின்ற பல மாணவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், காவல் துறையிலும், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளிலும் பணி புரிகின்றனர். மிகவும் பெருமையாக உள்ளது. ஆனால், தற்போது கடந்த சில ஆண்டுகளாக ஏன் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தோம் என எண்ணத் தோன்றுகிறது. மாணவர்களுக்கு தண்டனை கூடாது. அவர்களை அடிக்கக் கூடாது. திட்டக் கூடாது என மாணவர்களுக்குச் சாதகமாக உள்ள இந்த நிலையால் வருங்காலச் சமுதாயம் சீரழிவு பெறும் என்பதில் ஐயமில்லை. இன்னும் எனக்கு 5 ஆண்டுகள் ஆசிரியப் பணியைச் செய்ய வேண்டியுள்ளது. எப்படி பணியைச் செய்வோம்? எப்போது ஓய்வு பெறுவோம் என எண்ண வேண்டியுள்ளது.
ReplyDelete............................ பா.இளங்கோவன். இயற்பியல் ஆசிரியர், காஞ்சிபுரம்.
மனம்தளராதீர்கள், நீங்கள் ஒருவர்மட்டுமே சரியாக இருந்தால் போதாது. நீங்கள் மாணவர்களை பார்ப்பது +1 மற்றும் +2-ல் தான். சிறுவயதுமுதல் அவன் எவ்வாறு வளர்ந்திருப்பான்? உங்களுக்கு தெரியுமா? சரியான கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுத்தார்களா? சிந்தியுங்கள்.
Delete