1988-ஆம் ஆண்டு ஜூன்
6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட
காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம்
திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஓய்வூதியர்களின்
ஓய்வூதிய கருத்துருக்கள் இந்திய தணிக்கை, கணக்குத் துறை மாநில முதன்மை
கணக்காயர் (கணக்கு, பணிவரவு) அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன.
இதில் தங்கள்
கருத்துருக்களை திரும்பப் பெற்றவர்களும், இனி அனுப்பும் ஓய்வூதியதாரர்களும்
தங்கள் துறை அலுவலர்கள் மூலம் ஓய்வூதிய கொடுப்பாணை எண், பணிப் பதிவேடு,
திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்துக்கான முகாந்திரம், அரசு ஆணை எண்.
363-ன்படி திருத்திய ஓய்வூதியத்துக்கு பணிப் பதிவேடு கிடைக்கவில்லை
எனில், 4-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட
அட்டவணை, ஓய்வூதியதாரரின் விருப்பப் படிவம், இருப்பிட முகவரி, தற்போது
ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் சார் கருவூலத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன்
அனுப்ப வேண்டும்..
மேலும்
விவரங்களுக்கு "துணை மாநில கணக்காயர் (ஓய்வூதியம்), மாநில முதன்மை
கணக்காயர் அலுவலகம், 361, அண்ணா சாலை, சென்னை - 18' என்ற முகவரியில்
தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...