தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும்
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (4ஆம் தேதி) மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய
உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் கடந்த
ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும். முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும் வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார்.
sir, when will we publish polytechnic lecturer?
ReplyDeleteSeekkiram Veliyakum
DeleteRajamani sir next tntet exam eppo theriuma.
DeleteSir plz tell me about anganwadi posts . When they will announce?
ReplyDeletesir pg trb syllabus old syllabus-ah illai new syllabus-ah
ReplyDeletesir ithuvathu udane posting poduvangala illa 2 years aagumaa
ReplyDeletesubject wise posting details theriuma sir
ReplyDelete