Home »
» சிறுபான்மை மொழி ஆசிரியர் கவுன்சலிங் 13ல் நடக்கிறது
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேனிலைப்
பள்ளிகளில் காலியாக உள்ள சிறுபான்மை மொழிப்பாடங்களை
நடத்தபட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதற்கான
கவுன்சலிங் 13ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகங்களில் இணையதளம்மூலமாக நடக்கிறது. தெலுங்கு மொழியில் கணக்கு,
அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், மலையாள மொழியில் கணக்கு, அறவியல்
பாடங்களுக்கும், கன்னட மொழியில் கணக்கு பாடத்துக்கும், உருது மொழியில்
கணக்கு, அறிவியல் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கவுன்சலிங் நடக்கும்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கெனவே தெரிவு
செய்யப்பட்டு ஆணை பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் டிஆர்பி வழங்கிய தெரிவு
சான்று, கல்விச் சான்று, உள்ளிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம்
கொடுக்க வேண்டும்.
BC and MBC ?
ReplyDeleteGood morning friends. What about BC and MBC welfare department counselling?
ReplyDeletewhen is counseling for BC/MBC welffare dept? Kindly Reply
ReplyDelete