Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அனிமேஷன் பாடங்களுக்கான பயிற்சி தொடங்கியது

       பத்தாம் வகுப்புக்கான கணக்குப் பாடக்கூறுகள்  ‘அனிமேஷன்களாக’ உருவாக்கி வகுப்பறையில் நடத்தப்பட உள்ளது.  இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:

         பத்தாம் வகுப்புக்கான பாடங்களின் மையக்  கருத்துகளை  அனிமேஷனாக உருவாக்கி வகுப்பறையில் கற்பிக்க நடவடிக்கை  எடுத்துள்ளது. இதையடுத்து மாநில அளவில் மாவட்டத்துக்கு 3  ஆசிரியர்கள் வீதம் 96 பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்து, இந்த  பயிற்சியை தொடங்கியுள்ளோம். தகவல் தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி பல்வேறு பாடப் பொருட்களில் முப்பரிமாண முறையில் (3டி)  மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் சிடிக்கள் தயார்  செய்யப்பட்டுள்ளன. இதை எப்படி மாணவர்களுக்கு புரியவைப்பது என்பது  பற்றி மேற்கண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேற்கண்ட  96 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றபின் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று  பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். 

தற்போது கணக்கு பாடத்தின் மையக்கருத்தை அனிமேஷனாக  தயாரித்துள்ளனர். மற்ற பாடங்களுக்கு படிப்படியாக அனிமேஷன்  சிடிக்கள் தயாரிக்கப்பட உள்ளது. இந்த திட்டத் துக்கு ரூ.1 கோடி 50  லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதேபோல திருவண்ணாமலை,  வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டி னம்  உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொலைதூர மற்றும் மலைப்பாங்கான  பகுதிகளில் உள்ள 70 பள்ளிகளில் தகவல் தொழில் நுட்பத்தை  பயன்படுத்தி கணினி வகுப்பறைகள் நிறுவவும் ரூ.58 லட்சம் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயலாளர் சபீதா தெரிவித்தார்.





2 Comments:

  1. பகுதி நேர பட்டதாரி ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

    ReplyDelete
  2. panam koduththu velai vaangubavargal sariyaaga velai seivaargal. hmmm....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive