“பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை
இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம் அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு
பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது.
முதுகலை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர்
கார்மேகம் ஆலோசனை வழங்கினார்.
அவர் பேசியதாவது:
பிளஸ் 2 ல் 80 சதவீத தேர்ச்சி என்பது போதாது.100 சதவீத தேர்ச்சியை பெற
ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது
அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்வித் துறை ஆலோசனைகளை பெற வேண்டும்.
அடுத்த பொதுத் தேர்விற்குள் இன்னொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
இதில், தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும் இதன் பின்னரும் 100 சதவீத
தேர்ச்சியை எட்டாத பள்ளி களில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கல்வித்துறை தயங்காது, என்றார்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கின்றனர் ஆசிரியர்கள் ,
ReplyDeleteகுறிப்பாக,
கிராமத்து பள்ளிகளில்10 மற்றும் +2 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் .
சுய ஊக்குவித்தலே இல்லாமல்
" என்னவோ போடா மாதவா !"
மனநிலையிலேயே தற்போதைய மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர் !
பத்தாம் ,பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை வகுப்பில் உட்கார வைப்பதே பெரிய சாதனையாக இருக்க, அவர்களின் மனதை பாடத்தில் ஒருமுகப்படுத்துவது இமாலய சாதனையாக இருக்கிறது .
சட் சட்டென இயல்பு மாறும் பதின் பருவத்தில் இருக்கும் மாணவர்கள், எப்போதும் துரு துருவென எதிர்க்காலத்தைப் பற்றிய கவலையற்ற மனநிலையில் இருப்பது, ஆசிரியர்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கின்றது.
ஆசிரியர்கள், எப்படியாவது இந்த மாணவர்களை தேர்ச்சி பெற செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் ஒவ்வொரு விஷயமும், மாணவர்களிடம் கேலிக்குரியதாக மாறிப்போகிறது.
இது சற்று வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கு சலிப்பை தருகிறது .
ஆசிரியர்கள் எவரும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி தங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை .
நேரம் கிடைப்பதே பெரிய விஷயமாகி போய் விட்டது,
எப்படியாவது 75%க்கு மேல் வாங்கி அதிகாரிகளின் கண்டன பேச்சிலிருந்து தப்பி விட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் தற்போதைய கவலை !
இப்படியொரு மனநிலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எப்படி நேரத்தை வீணாக்க தோன்றும் ?
விளைவு !
நீதி போதனை பாட வேலைகளும் பாட ஆசிரியர்களின் கரங்களில் அடைக்கலமாகிவிட்டன !
இது தான் தற்போதைய அரசுப்பள்ளிகளின் நிலைமை !
மெட்ரிக் பள்ளிகளின் நிலைமை?
சொல்லவே வேண்டாம் !
பிராய்லர் கோழிகள் வளர்ப்பு தான் !
ஆசிரியர்களின் மீதான அதிகாரிகளின் வன்முறை வார்த்தை பிரயோகங்கள் மற்றும் கிடுக்கு பிடி செயல்பாடுகள் தளர்ந்து,
எப்போது அன்பான, ஆரோக்கியமான ,நட்பான , அரவணைப்பான அணுகுமுறை உருவாகிறதோ அப்போது தான் உண்மையான கல்வி நிகழும் !
நல்ல சமுதாயம் தழைக்கும் !
இளைய தலை முறையினரை வெறும் மதிப்பெண் அடிப்படையில் பார்த்து ,
ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால்,
2%போயிற்று (ஒவ்வொரு மாணவனும் 2%),
என்று மாண்புமிகு மாணவன் வெறும் மதிப்பெண் சதவீதமாக மாறிப்போய் கிடக்கும் கொடுமையை காண்பதை விட, ஒரு நல்ல ஆசிரியருக்கு ,ஒரு மனசாட்சி உள்ள மனிதருக்கு வேறு பெரிய தண்டனை இருந்து விட முடியாது.
கட்டுரை எழுதியவர் : திருமதி.D.விஜயலெட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்