Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article: இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை

TET Article : இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை, உயிரைத்தவிர - கலங்கும் வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தகுதித்தேர்வுக்கு தயார் செய்ய என் வேலையை இழந்தேன்... 

தகுதித்தேர்வுக்கு  போதுமான புத்தகங்கள் வாங்க பையில் இருந்த பணத்தை இழந்தேன்...


வாங்கிய புத்தகங்களை முழுவதும் படிக்க
இரவு நேர தூக்கத்தையும் இழந்தேன்...

படித்ததை மனதில் நிறுத்தி வைக்க என் அன்றாட தேவைகளை இழந்தேன்...

முன் தேதியிட்ட மதிப்பெண் தளர்வு வந்தது மன நிம்மதியை இழந்தேன்...

G.O.71 என்ற நஞ்சு செடியும் முளைத்தது  ஒட்டு மொத்த நம்பிக்கையும் இழந்தேன்...

குளறுபடிகளின் தேர்வுபட்டியல் வந்தது
என் வாழ்கையையே இழந்தேன்...

இன்னும் என்ன இருக்கிறது
நான் இழப்பதற்கு!!!

தேர்வு முடிவுகள் என் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்
என நினைத்திருந்த வேளையில்,

தேர்தலால் வந்த குளறுபடிகள் என் துயரத்திற்கு
, வினை வைத்துச் சென்றது...

கதிர் அறுக்கும் அரிவாள்
மனித கழுத்தை அறுக்கக் கூடாது, ...

நலம் கொடுக்கும் அரசாணை
மனித வாழ்க்கையை அழிக்கக் கூடாது...

இங்கே என்னைப் போல் பலர் பாதிக்கப்பட்டார்களே,
அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்??

நாங்கள் பலம் வாய்ந்தவர்களாய் இல்லாமல் போகலாம்,
ஆனால் எங்கள் கண்ணீர் பலம் வாயந்ததே...

(கலங்கிய கண்களுக்கு என்னுடைய இந்த ஆதங்க வரிகள் அர்ப்பணம் )..

Article by
என்றும் உங்கள் நண்பன்
Mr.RED FIRE.




5 Comments:

  1. same to you ( இப்படிக்கு ஆயிரக்கனக்கான 90 and above)

    ReplyDelete
  2. Real Ariticle, so nice Thanks friend. . . ORUVAR NAM KANNERUKKU PATHIL SOLLI KONDIRUKKIRAR, VIRAIVIL EDU CATION SEC, MIN PATHIL SOLVARGAL

    ReplyDelete
    Replies
    1. உண்மையாக சொன்னீர் salem cluster

      Delete
  3. கவலை வேண்டாம் நண்பரே 2016 தேர்தல் உள்ளது அதில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் செய்திடுங்கள்......... அப்பொழுது தெரியும் ஆசிரியர்கள் வெற்றி யார் பக்கம்என்று...........

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive