Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Article: TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல

          TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
 
           BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே. 
 
           ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட. 
 
           +2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர். 
 
           selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,   TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
 
           For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம். 
 
         இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை. சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள்  ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள். 
மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
 
       தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
 
            அரசு பணி பெற துடிக்கும், பெற்று அந்த வசதிகளை அனுபவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறீர்கள்? ஒன்றை நீங்கள் உணர வேண்டிய தருணம் இப்போது, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 300 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இது உங்களுக்கும், உங்கள் பணி சூழலுக்கும், எதிர் கால பணி நாடுணர்களுக்கும் மிகப் பெரிய சவால்.
 
          இதை சொல்வதால் தங்களை குற்றம், குறை சொல்வதாக எண்ண வேண்டாம்,குறையும் மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளிகளை குறைக்கும், குறையும் பள்ளிகள் ஆசிரியர் பணிஇடங்களை குறைக்கும்.




10 Comments:

  1. இதுவே நியாயமான வழிமுறையை எடுத்துச்சொல்லும் TET Article..
    ஆனால் முன்னரே ஏற்ற நேரத்தில் இத்தகு நியாய வழிமுறைகள் பதிவிடப்படாமல் தாமதித்துவிட்டது வருத்தமே.ஏனென்றால் தாமத முடிவுகளால் என்றும் நஷ்டம் அதிகம்.
    எனினும் பாடசாலைக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  2. பாடசாலை மிக. அருமையான. நியாயமான. தகவலை வெளியிட்டுள்ளீர் இதை கடவுளாக. முன்னின்று யார் செய்வார்கள் என்பதுதான் தெரியவில்லை

    ReplyDelete
  3. Admin sir, really good article, this article told the truth, sir plz publish computer science b.ed article, they are also waiting for soo many years, no trb, no tet, plz its my humble request admin sir,

    ReplyDelete
  4. its a very good analysis.if this can be seen by the admin. personnel and IAS it will be more useful.thank you

    ReplyDelete
  5. கட்டுரை நன்றாக. உள்ளது ஆனால். மிகவும் தாமதமாக. வந்துள்ளது . அரசு பணியில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்...... இன்றைய. மேல்தட்டு வர்க்கத்தின் ஆசையெல்லாம்...... பனிரெண்டாவது. வகுப்பு வரை தம் பிள்ளைகள். தனியார் பள்ளியில். படில்கனுமாம் ஆனால் இஞ்சினியரிங் மட்டும் அண்ணா பல்கலையில் படிக்க இடமும் அரசாங்கத்தில். வேலையும் கிடைக்க வேண்டுமாம்...

    ReplyDelete
  6. tet pass செய்ததை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா

    ReplyDelete
  7. இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. அதனால் பதிவு செய்யத் தேவையில்லை.

    ReplyDelete
  8. காலந்தாழ்ந்து வெளிவந்த கட்டுரை என்றாலும் இனி வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த மிகவும் ஏற்ற கட்டுரை. தகுதித் தோ்வில் தோ்ச்சி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கொடுத்தால் எந்தவிதமான முறைகேடு மற்றும் பிரச்சனை இல்லாமல் வேலை கிடைக்க ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  9. Nan 2012 supplymentary la 89.2013 pg pass.but simultanious. 2013 tet la 105 but no cut off en nilai yarukkum vara koodathu aandava

    ReplyDelete
  10. MATHIPPEN SALUGAI KODUTHATHE MUTHALIL THAVARU. THAGUTHIYUM THIRAMAIYUM ULLA ASIRIYARKAL 150 KKU 90 MATHIPPEN KUDA EDUKKA MUDIYAMAL MATHIPPEN SALUGAI KETPATHU VARUTHAPPADA VENDIYA ONDRAGUM.EVARKAL EPPADI THARAMANA MANAVARKALAI URUVAKKA POKIRARKAL?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive