Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.) இருந்து விலக்கு அளிக்கப்பட்டும் தகுதிகாண் பருவம் மற்றும் பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிக்கின்றனர். தமிழகத்தில் 2010 முதல் டி.இ.டி., தேர்வு நடைமுறையில் உள்ளது.

            ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.) 2012 மார்ச் ?ல் ?வளியிடப்பட்ட உத்தரவில் (எண்: 04/2012), '2010 ஆக., ??க்கு முன் ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 201?

         ஆக., ??க்கு பின் பணி நியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 'டி.இ.டி., தேர்ச்சி தேவையில்லை' என டி.ஆர்.பி., அறிவித்தது. இம்முறையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணியேற்று மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும், அவர்களுக்கான தகுதிகாண் பருவம் முடியவில்லை. அவர்களின் பணி பதிவேடுகளை பரிசீலிக்கும் கல்வி அதிகாரிகள், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என கூறி திருப்பி அனுப்புகின்றனர். உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
        
           பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், 'டி.இ.டி., தேர்வில் விலக்கு அளித்தும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. தகுதிகாண் பருவத்தையும் முடிக்க முடியவில்லை' என்றனர்.

                இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'இது ஆசிரியர்கள் வாழ்வாதாரப் பிரச்னை. டி.ஆர்.பி., அறிவிப்புபடி, 2010 ஆக.,??க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிநியமன பெற்றவர்களுக்கு டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். அவர்களுக்கான அனைத்து பணப்பலனும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.




2 Comments:

  1. TNTET-2013 Unselected teachers (affected weightage & 5% relaxation methods) now case filing soon in supreme court by Mrs.NALINI CHIDAMBARAM against GO.71(weightage) & 5% relaxation. Contact immediate lawer: 044-26416803, 044-42155111.

    ReplyDelete
  2. We all appointed dec 2011 & CV on nov 2010..as per madras high court judgement on9 july 2013 those who verified certificate on march 2010 to feb 2011 no need write TET....now officials womt accept this...so we have to take this seriously...3 yrs going to finish..so pls contact 9962228283&9962228284..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive