1973ஆம் ஆண்டில் மோட்டோரோலா நிறுவனத்தின் மார்டின்
கூப்பா் முதல் செல்போனை வடிவமைத்தார். (இவா் முதலில் பேசியது யாருக்கு தெரியுமா? இவரின்
போட்டி நிறுவனத்திற்கு). சில கிலோக்கள் எடை கொண்ட இந்த போனில் சில நிமிடங்கள் மட்டுமே
பேச முடியும். இதன் பின்னா் படிப்படியாக போனின் உருவ அளவு மற்றும் எடை குறைப்பும்,
செயல்திறன் வளா்ச்சியும் பெற்றுள்ளது.
செல்போன்கள்
எலக்ட்ரானிக் துறையை சார்ந்தவை. ஒரு பட்டணிற்கு ஒன்றுக்குமேற்பட்ட செயல்பாடுகள் கொண்டவை
இவை. எனவே இவற்றிற்கு எந்த சமயத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று வழிநடத்த ஒருவா்
தேவை. இந்த பணியை செய்வதே அவற்றின் ஓ.எஸ் எனப்படும் ஆப்பிரேடிங் சிஸ்டம். ஆரம்ப காலங்களில்
மெஷின் லெவல் மொழியில் இவை எழுதப்பட்டன. எஸ்.எம்.எஸ் போன்ற உயா்நிலை செயல்களுக்கு இந்த
இயந்திர மொழி போதுமானதாக இல்லை. எனவே நவீன கம்பியுட்டா் மொழிகளில் இவற்றிற்கான ஒ.எஸ்கள்
எழுதப்பட்டன. இதன் பயனாய் டாஸ், சிம்பியான் மற்றும் ஜாவா போன்ற மொழிகளில் செல்போன்களுக்கான
ஒ.எஸ்கள் உருவாக்கப்பட்டன.
மேம்பட்ட
செயல்திறனிற்காக கூகுள் நிறுவனம் ஆண்டிராய்டு என்ற இலவச ஒ.எஸ்ஸையும், ஆப்பிஸ் நிறுவனம்
ஐ.ஒ.எஸ்ஸையும், மைக்ரோஸாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஒ.எஸ்ஸினையும் உருவாக்கின. இதில் ஆண்டிராய்டினைத்
தவிர பிற ஒ.எஸ்களை விலைகொடுத்தே வாங்க வேண்டும். மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் ஒ.எஸ்களை
தங்கள் செல்போனுக்கு மட்டுமே பயன்படுத்தும். பிற நிறுவனங்களுக்கு வழங்காது. ஆனால் கூகுள்
நிறுவனத்தின் ஆண்டிராய்டு ஒ.எஸ் ஆனது இலவச கட்டற்ற மென்பொருளாகும். இதை யார் வேண்டுமென்றாலும்
தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தலாம்.
இதன்
காரணமாக தங்களுக்கென தனி ஒ.எஸ்ஸினை உருவாக்காத சேம்சங், மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும்
லாவா போன்ற நிறுவனங்கள் ஆண்டிராய்டு ஒ.எஸ்ஸினை (இலவசமாக) பயன்படுத்துகின்றன. இதன் காரணமாகவே
ஆண்டிராய்டு ஒ.எஸ்ஸானது பிற நிறுவனங்களின் மென்பொருட்களைவிட மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கூறியது
போன்ற உயா்நிலை ஒ.எஸ்கள் கணினி ஒ.எஸ்களுக்கு இணையானவை. எனவே இவை இயங்க பிராசஸா் எனப்படும்
கணக்கிடும் கருவிகளும், ஜிபியு (கிராபிக்ஸ் பிராசஸிங் யுனிட்) எனப்படும் படங்கள் சார்ந்த
கணக்கிடும் கருவிகளும், ரோம் எனப்படும் நிரந்தர நினைவகங்களும், ராம் எனப்படும் தற்காலிக
நினைவகங்களும் தேவை.
(அலைபேசி தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கான விளக்கம் இன்று மாலை நம் பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படும்.)
by Author Mr. P. Tamizh
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...