கிராபிக்ஸ் பிராசஸிங்
யுனிட் என்று பொருள்படும் ஜி.பி.யுக்களானது கம்பியுட்டா் மற்றும் செல்போன்களின் வீடியோ
மற்றும் கேம்களை இயக்கும் பகுதியாகும். (கம்பியுட்டா்களின் கிராபிக்ஸ் கார்டும் ஒரு
வகை ஜி.பி.யுவே ஆகும்). சி.பி.யு (சென்ட்ரல் பிராசஸிங் யுனிட்கள்) எனப்படும் பிராசசா்கள்
(சுத்திகள்) போனின் அனைத்து கட்டளைகளையும்
இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
வீடியோக்களை இயக்குவதும், உயர்தர (3டி) கேம்களின்
கிராபிக்ஸ் காட்சிகளை ரெண்டா் செய்வதுமே இவற்றின் பணி. (ரெண்டா்-கொடுக்கப்படும் இன்புட்டுகளுக்கான
அவுட்புட்டினை உருவாக்கும் பணி). வீடியோக்கள், ப்ரேம்கள் எனப்படும் தனித்தனி போட்டோக்களின்
தொகுப்பினால் ஆனவை. ஒரு விநாடி வீடியோவினை இயக்குதல் என்பது, ஒரு விநாடியில் 24 தனித்தனி
ஃபோட்டோக்களை வெகுவிரைவில் பார்ப்பதற்கு சமமாகும். எச்.டி வீடியோக்களின் ஒரு ப்ரேமே
சில எம்.பிக்கள் அளவுடையதாகக் கூட இருக்கும். இவ்வாறு பல ஆயிரம் முதல் பல லட்சம் ப்ரேம்களை
மிக குறுகிய நேரத்திற்குள் திரையில் துல்லியமாக தோன்றச் செய்ய இவை கண்டிப்பாக தேவை.
(உங்கள் போன் எச்.டி வீடியோக்களை திக்கி திக்கி இயக்குவதற்கு அதன் திறன் குறைந்த ஜி.பி.யுக்களே
முக்கிய காரணமாகும்).
உயர்தர 3டி கேம்களை இயக்கும் போது பேக்ரவுண்ட்
காட்சிகள், கேமின் முக்கிய கதாபாத்திரம், பேக்கிரவுண்டிற்கும் இவற்றிற்கும் உள்ள இடைவெளியின்
மாற்றங்கள், அவற்றின் நிழல், மற்றும் பார்டிக்கல்கள் எனப்படும் நெருப்பு, புகை, நீர்நிலைகள்
போன்றவற்றை விநாடிக்கும் குறைந்த நேரத்தில் தோன்றச் செய்வதும் இவற்றின் முக்கிய பணியாகும்.
குவால்காம் நிறுவனத்தின் அட்ரீனோ ஜி.பி.யுக்களும், ஏ.ஆா்.எம் நிறுவனத்தின் மாலி ஜி.பி.யுக்களும்
தற்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
பிராசஸா்களைப் போன்றே இவற்றிலும் சிங்கில் கோர்
ஜி.பி.யு, டியுயல் கோர் ஜி.பி.யு, குவாட் கோர் ஜி.பி.யு மற்றும் ஆக்டா கோர் ஜி.பி.யு
என முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. அனைத்து உயா்தர 3டி கேம்களும் சிறப்பாக இயங்க
போனில் குறைந்தபட்சம் குவாட்கோர் ஜி.பி.யு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
Article by Mr. Pa.Tamizh.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...