sir
i am using samsung galaxy s3 without using my phone my battery was
drying nearll 70% at evening how save the battery life then another
doubt which is best antivirus for my android phone
by murugesan
by murugesan
வணக்கம்.
உங்கள் போனில் பயன்படுத்தாத நேரங்களில் வை-பை, புளுடூத், டேட்டா, ஸ்கிரீன்
ரொட்டெஷன், சிங்க் மற்றும் ஜிபிஎஸ் போன்ற சேவைகளை அணைத்து வையுங்கள்.
டிஸ்பிளே பிரைட்னஸையும் 50சதவீதம் அளவில் வையுங்கள். லவுட் ஸ்பீக்கா்
பயன்பாட்டினைக் குறைத்து, ஹெட்போனினை பயன்படுத்துங்கள். லைவ்
வால்பேப்பா்களை நீக்கி, நிலையான (அசையாத) வால்பேப்பா்களை பயன்படுத்துங்கள்.
தினமும் போனினை குறைந்தது நான்கு மணிநேரங்களாவது சார்ஜ் செய்திடுங்கள்.
சில நிமிடங்களில் உங்கள் போன் சார்ஜ் ஆகிவிட்டது என்று தகவல் வந்தாலும்
நம்பாதீா்கள். பயன்படுத்தாத ஆஃப்களை மினிமைஸ் செய்யாமல், க்ளோஸ்
செய்யுங்கள்.
வங்கி பயன்பாடு செய்யாத போன்களுக்கு ஆண்டி வைரஸ்
மென்பொருட்கள் தேவையற்றது. உங்கள் பேட்டரியின் விரைவான இழப்பிற்கும்
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான ஆண்டி வைரஸ் மென்பொருட்கள்
உங்கள் போனின் நினைவகம் மற்றும் பிராசஸிங் திறனினை அதிகம் பயன்படுத்தி,
போனின் பிற செயல்பாட்டின் வேகத்தினைக் குறைக்கும். உங்கள் போனினை
கணினியுடன் இணைக்கும் சமயங்களில் மட்டும் கவனம் தேவை. நீங்கள் இணைக்கும்
கம்பியுட்டரில் வைரஸ் இருப்பின் அது உங்கள் மெமரி கார்டினைத் தாக்கும்.
நன்றி.
1.How to read Tamil text without rooting ? Same. Udayakumar question .
2.digitizer means?
3.my canvas 4 phone has broken. But still I use the" touch".it means the glass only broken or touch broken? What will I cjange?
2.digitizer means?
3.my canvas 4 phone has broken. But still I use the" touch".it means the glass only broken or touch broken? What will I cjange?
how
to install tamil fonts in moto E? the emails containing tamil fonts are
not in readable format. the "FONT INSTALLER" is unable to install a
tamil font in system>font area.. Resolve this problem of many android
users.
Answer:
தமிழ் ஃபாண்டிற்கான தீா்வு விரைவில் வீடியோவாக வெளியிடப்படும். சில நாட்கள் காத்திருக்கவும்.
Nokia . Lomina520 il andraied soft wear how will install
Answer:
மன்னிக்கவும்.
உங்கள் போனில் விண்டோஸ் போனுக்கான மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த
இயலும். ஆண்டிராய்டு மென்பொருட்கள் பொருந்தாது. நீங்கள் விரும்பும் ஆஃபின்
பெயரை நோக்கியா ஸ்டோரில் தேடிப்பாருங்கள்.
Another one same nokia lum520. How will install Tamil font and downlod pic,vidio save
Answer:
தமிழ்
ஃபாண்டிற்கான தீா்வு விரைவில் வீடியோவாக வெளியிடப்படும். யு டியுப்
டவுண்லோடா்களை பதிவிறக்கி பயன்படுத்துங்கள். வலைப்பக்கங்களில் போட்டோக்களை
பதிவிறக்கம் செய்ய, தேவையான போட்டோவினை திறந்து, உங்கள் ஆப்ஷன் பட்டணை
க்ளிக் செய்து, சேவ் ஆஸ் ஆப்ஷனினை பயன்படுத்துங்கள். அல்லது விரலால் சில
நொடிகள் தொட்டுக் கொண்டிருங்கள். இதனால் தோன்றும் ஆப்ஷன் பகுதியில்
சேவ்வினை தோ்வு செய்யுங்கள். (சில வலைதளங்களில் சேவ் செய்யும் வசதி தடை
செய்யப்பட்டிருக்கும்)
1.oru
smart phone vangum bothu basica enna enna features parthu vanganum.
2.what is the difference between ram and rom in cell phones.
Answer:
அடுத்தாக வெளியாக உள்ள பகுதிகள் உங்களுக்கு பெரிதும் உதவும். சில நாட்கள் காத்திருக்கவும். நன்றி
vanakkam sir, how copy text from fb to whatsApp.
Answer:
விரலால் தொடா்ந்து சில விநாடிகள் எழுத்தை தொட்டுக் கொண்டிருக்கவும். இதனால் தோன்றும் டூல்களில் காப்பியினைத் தோ்வு செய்யுங்கள்.
நான்
எனது கணினியில் கூகுள் குரோம் மூலமா பாடசாலை வலைதளத்தை பார்க்கும்பொழுது 4
அல்லது 5 விளம்பர விண்டோக்கள் வந்து திரையை மரைக்கின்றன். அதை எவ்வாறு
தடுத்து நிறுத்துவது என கூறவும். நன்றி.
Answer:
பாடசாலை
தங்கள் கணினி கூகுள் குரோம் பிரவுசரில் ஏதேனும் சாப்ட்வேர் டவுன்லோடு செய்யும்போது ஆட் ஆன் புரோகிராம்களாக சில மால்வேர் புரோகிராம்கள் மற்றும் சர்ச்பார்கள் மற்றும் நான்குபக்க விளம்பர பலகைகள் சார்ந்த சாப்ட்வேர்கள் தாங்கள் அறியாமலேயே பதியப்பட்டுவிடும். பெரும்பாலும் இவை இணையத்தில் நமக்கு தேவையான புதிய இலவச சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யும்போது கீழே ஒரு சிறிய ”டிக்” மார்க் தரப்பட்டு இவையும் தானாகவே பதியப்படும். நாமும் இன்ஸ்டால் செய்யும் அவசரத்தில் Next, Next என கொடுத்துவிடுவோம். அங்குதான் தாங்கள் கூறிய தவறு நடக்கிறது. தங்களுக்கு உதவ சில எளிய வழிகள்-
- Control Pannel -> Uninstall Programme சென்று தங்கள் விளம்பர புரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்யலாம்.
- Google Browser -> Settings சென்று தங்கள் விளம்பர புரோகிராம்களை Disable செய்யலாம்.
- மேற்கொண்டும் பிரச்சினை என்றால் தங்கள் கூகுள் பிரவுசரை அன்இன்ஸ்டால் செய்து, மீண்டும் இன்ஸ்டால் செய்யலாம்.
- அப்படியும் தங்கள் பிரச்சினை ஓயவில்லை என்றால் ”விண்டோஸ் ஓ.எஸ்” மீண்டும் பதிவது தான் ஒரே வழி.
எனவே புரோகிராம்களை இன்ஸ்டால் செய்யும்போது அவசரப்பட்டு ”நெக்ஸ்ட்” கொடுக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.
ReplyDeleteவணக்கம்.
நான் Lenovo android 4.2.2- smartphone உபயோகம் செய்து வருகிறேன்.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை
Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது.
சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
qus:1.இதை Download செய்யலாமா.?
qus:2.இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
please reply..நன்றி
கேள்விக்கு நன்றி. ஒரு நிறுவனம் ஒரு படைப்பை உருவாக்கிய பின்னா் அதை பல்வேறு சூழல்களில் சோதித்த பின்னரே சந்தைப்படுத்தும். இவ்வாறு உருவாக்கப்பட்ட படைப்பாக இருந்தாலும் உண்மையான பயனாளாரின் கையில் அந்த படைப்பானது துவக்கத்திலேயே சிறப்பாக செயல்படாது. விண்டோஸ் எக்ஸ்.பி சா்வீஸ் பேக் 2 அதிகம் பயன்படுத்தப்பட்டதைக் கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆரம்ப சோதனைகளில் உருவாகாத தேவைகளும், பிரச்சனைகளும் நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் தோன்றும். இவ்வாறு படைப்பு சந்தைப்படுத்தப்பட்ட பின்னா் தோன்றும் குறைபாடுகளை போக்க, மேம்படுத்தப்பட்ட மென்பொருள் தொகுப்பை குறிப்பிட்ட நிறுவனம் உருவாக்கும். இவ்வாறு வழங்கப்படும் மேம்பாட்டு மென்பொருளே ஃபார்ம்வோ் ஆகும்.
ReplyDeleteஇத்தகைய மென்பொருட்களை உங்கள் டிவைஸ்களில் நிறுவுவதால் கண்டிப்பாக மெமரியின் ஒரு (சிறு) பகுதி குறையும். இருப்பினும் உங்கள் டிவைஸானது போதிய நிலைப்புத்தன்மை இன்றி அடிக்கடி ரீஸ்டார்ட் ஆனாலோ, குறைந்த பேட்டரி பயன்பாட்டுடன் செயல்பட்டாலோ, டிவைஸின் சில கூடுதல் மென்பொருட்களோ அல்லது கேமிரா, ஜீபிஎஸ் மற்றும் மைக் போன்ற ஹார்ட்வோ் பாகங்களோ சரியாக இயங்கவில்லை என்றால் நாம் கட்டாயம் இந்த ஃபார்ம்வோ்களை நிறுவியாக வேண்டும்.
மாறாக உங்கள் டிவைஸில் மேற்கண்டதைப் போன்ற குறைகளின்றி உங்கள் தேவைக்கேற்ப செயல்பட்டால், இதை நிறுவ அதிக அவசியமில்லை. மெமரி பற்றாக்குறை இல்லாதபட்சத்தில் இவற்றை நிறுவுவது உகந்தது. பெரும்பாலான ஃபர்ம்வோ்கள் உங்கள் டிவைஸின் செயல்பாட்டு வேகத்தினை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கும்.
குழப்பம் இருப்பின் அந்த குறிப்பிட்ட ஃபர்ம்வேரானது எத்தகைய தேவைக்காக உருவாக்கப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தின் வலைப்பகத்தில் கண்டறியலாம். இவ்வாறு மேம்பாட்டின் தேவை உங்களுக்கு பயன்படாது எனில் அதை தவிர்க்கலாம். சில நிறுவனங்களின் இத்தகைய கூடுதல் மென்பொருளானது டிவைஸின் முந்தைய வேகத்தினை குறைக்கவும் செய்யலாம் எச்சரி்க்கை.
மேம்பாட்டின் தேவையிருந்தும் டிவைஸில் இடவசதி இல்லையெனில் அந்த நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம். இதனால் பழைய மென்பொருளின் மீது கூடுதல் சுமையாக இல்லாமல், எடைகுறைந்த தனித்த மென்பொருள் உருவாக்கபட்டிருப்பின், முந்தை மென்பொருள் அழிப்பட்டு இவை நிறுவப்படும். பழங்கால வீட்டின் மேல் மற்றொரு தளம் கட்டி சுமையை ஏற்றாமல், பழைய வீட்டினை இடித்துவிட்டு புதிய வீட்டினை நம் தேவைக்கு கட்டுவதை இதற்கு உதாரணமாக கூறலாம். நன்றி.
Wow ... தாங்கள் கூறிய தகவலும், விளக்கத்திற்கான உதாரணமும் மிகத் தெளிவாக புரிந்தது சார் ..
DeleteThanks for your reply.
சார் ...நான் சோனி எக்ஸ்பிரியா டபுள் சிம் ஆன்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறேன்..போன் மெமரியில் உள்ளதை எப்படி மெமரி கார்டுக்கு மாற்றுவது
ReplyDelete