Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Cell Phone Article - பிராசஸா்கள்


பிராசஸா்கள்
இவையே செல்போன்கள் மற்றும் கம்பியுட்டரின் மூளையாகும். செல்போன் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயல்களும், பல ஆயிரம் வரிகள் கொண்ட கட்டளைகளாக (கமாண்ட்ஸாக) இருக்கும். ஃபோனின் ஒவ்வொரு செயல்பாடும் நடைபெற, அதற்கான கட்டளைகள் இயக்கப்பட வேண்டும். கட்டளைகளை படித்து, அவற்றிகான செயலை இயக்கும் பகுதியே பிராசஸராகும். 
 
       உதாரணமாக உங்கள் நண்பா் உங்களுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜை அனுப்புகிறார் எனில், அதை நெட்வொர்க்கில் இருந்து பெற்று, அதை இன்பாக்ஸில் நியு மெசேஜ் என்று, தகவல் பெறப்பட்ட தேதி மற்றும் நேரத்துடன் பதிவு செய்து, திரையில் வெளிச்ச லைட்டினை இயக்கி, திரையின் நோட்டிபிகேஷன் பகுதியில் அந்த மெசஜின் பிரிவியுவினை தோன்றச் செய்ய வேண்டும். உங்கள் நண்பரின் எண் பதியப்பட்டால் அதற்கான பெயா் மற்றும் புகைப்படத்தையோ, அல்லது பதியப்படாத எண் எனில் அந்த எண்ணைினையோ திரையில் தோன்றச் செய்ய வேண்டும். கால் லாஃக்கிலும் அந்த எண்ணில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது என்று பதிவு செய்ய வேண்டும். உங்கள் மெசஜ் அலா்ட் சத்தத்தினை ஒலிக்கச் செய்ய வேண்டும். ஃபோன் வைபரேட் மோடில் இருந்தால் சத்தம் எழுப்புவதற்கு பதிலாக, வைபரேட் மோட்டாரை குறிப்பிட்ட முறைகள் இயக்க வேண்டும். பின்னா் மூன்று அல்லது ஐந்து வினாடிகளில் திரையின் வெளிச்சத்தினை அணைக்கும். (மெசேஜிற்கே இவ்வளவு கட்டளைகளா என நீங்கள் புலம்புவது எனக்கு கேட்கின்றது) மெஸஜிற்கே இவ்வளவு கட்டளைகள் என்றால் பிற செயல்பாடுகளை யோசித்துப் பாருங்கள்.

பிராசஸருக்கு மேற்கண்ட பணிகளைச் செய்ய செல்போனின் பிற பாகங்களும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என்றாலும், இவற்றின் பங்கே மிக அதிகம். பிராசஸா்களை கல்குவாரிகளில் இருக்கும் கல்களை உடைக்கும் க்ரஷ்ஷருடன் (சுத்தியல் போன்ற பகுதியுடன்) ஒப்பிடலாம். (தங்கள் முன் இருக்கும் கல் போன்ற பெரிய கமாண்ட் தொகுப்புகளை சிறிய பகுதிகளாக உடைத்து செயல்படுத்துவதே இவற்றின் பணி) இவற்றின் செயல்திறன் மெகாஹொ்ட்ஸ் என்ற அலகினால் அளவிடப்படும். ஆரம்பகால ஸ்மார்ட் ஃபோன்கள் சில நூறு மெகாஹொ்ட்சுடன் (1மெகா ஹொ்ட்ஸ்-1000ஹொ்ட்ஸ்) உருவாக்கப்பட்டன. (சேம்சங் கேலக்சி ஒய் – சுமார் 800மெகாஹொ்ட்ஸ் வேகமுடையவை).

 பல ஆண்டு வளா்ச்சியின் காரணமாக மெகாஹொ்ட்ஸ்கள் ஜிகாஹொ்ட்சுகளாக (1024 மெகாஹொ்ட்ஸ்) மாறின. (சிறிய சுத்தியல் அளவில் பெறிய சுத்தியல் ஆனதைப் போன்ற வளா்ச்சி). சேம்சங் கேலக்ஸி ஸ்டார் ஃபோனானது 1ஜி.ஹெ திறன் கொண்டது. இந்த பெரிய சுத்தியலின் செயல்பாடும் பெரிய மென்பொருட்களை இயக்க (ஒன்றுக்குமேற்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் இயக்க) போதுமானதாக இல்லை.

அடுத்த தலைமுறை மாற்றமாக இன்னும் பெரிய சுத்தி்யலை தேடாமல், பொறியாளா்கள் இரண்டு சுத்திகளை ஒரே செல்போனில் பொருத்தினா். இரண்டு சுத்தியல்கள், தனித்தனியாக ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்தன. இத்தகைய பிராசஸா்களானது டியுயல் கோர் பிராசஸா்கள் (டியோ - இரண்டு) என்று அழைக்கப்பட்டன. இம்முறையில் 1.3ஜி.ஹெ டியுயல் கோர் பிராசஸா் என்றால், அந்த போனில் 1.3ஜி.ஹெ செயல்திறன் கொண்ட இரண்டு தனித்தனி பிராசஸா்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று பொருள். சேம்சங் கேலக்ஸி எஸ் டியோஸ் ஃபோனானது இவ்வகை பிராசசரைக் கொண்டது.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இத்தகைய மாற்றமும் போதுமானதாக இல்லை. எனவே இரண்டு சுத்தியலுக்கு பதிலாக நான்கு சுத்தியல்கள் ஒரே ஃபோனில் பொருத்தப்பட்டன். இவை குவாட் கோர் பிராசஸா்கள் என்று அழைக்கப்பட்டன. (குவாட் - நான்கு). இம்முறையில் 1.2ஜி.ஹெ குவாட் கோர் பிராசஸா் என்றால், அந்த போனில் 1.2ஜி.ஹெ செயல்திறன் கொண்ட நான்கு தனித்தனி பிராசஸா்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று பொருள். சேம்சங் கேலக்ஸி கிராண்ட் ஃபோனானது நான்கு கோர்களைக் கொண்டது.

இத்தகைய செயல்திறனும் போதாத இன்றைய சூழலுக்காக ஆக்டா கோர் (ஆக்டா-8) பிராசஸா்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் ஒரே செல்போனில் ஒரே வேகமுடைய எட்டு தனித்தனி பிராசஸா்கள் (சுத்தியல்கள்) செயல்படும். சேம்சங் கேலக்ஸி நோட்3 மற்றும் கேலக்ஸி எஸ்4 போன்ற ஃபோன்கள் மேற்கண்ட வகை பிராசசா்களைக் கொண்டவை.

 சில நிறுவனங்களின் (மாடல்களின்) இவ்வகை பிராசஸா்கள் சற்று வேறுபட்டவை. இவற்றில் எட்டு பிராசஸா் பகுதிகளும் (திரட்டுகள்) ஒரே அளவாக இருப்பத்தில்லை. முதல் நான்கு பிராசஸா்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், அடுத்த நான்கு பிராசஸா்கள் சற்று குறைந்த வேகத்திலும் செயல்படும். சேம்சங் கேலக்ஸி எஸ்5 ஃபோன் இவ்வகையைச் சார்ந்தது. இதன் முதன் நான்கு கோர்கள் 1.9ஜி.ஹெ திறன் கொண்டவை. அடுத்த நான்கு பிராசசா்கள் 1.3ஜி.ஹெ திறன் கொண்டவை.


நோக்கியா நிறுவனத்தின் லூமியா ஃபோன்கள், மோடோ ஈ, ஜீ, மற்றும் மோடோ எக்ஸ் ஃபோன்கள், நவீன கூகுள் நெக்ஸஸ் ஃபோன்கள் மற்றும் சேம்சங்கின் சில மாடல்களிலும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்நாப்டிராகன் பிராசசா்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிள் ஃபோன்கள் மற்றும் சேம்சங்கின் சில அடிப்படை மாடல்களில் ஏ.ஆா்.எம் நிறுவனத்தின் கார்ட்டெக்ஸ் வகை பிராசசா்கள் பயன்படுத்தப்படுகின்றன. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான மாடல்களில் மீடியா டெக் என்ற நிறுவனத்தின் பிராசசா்களும் பயன்படுத்தப்படுகின்றன. கம்பியுட்டா் பிராசசா் தயாரிப்பு ஜாம்பவனான இன்டெல் நிறுவனமும் தற்போது செல்ஃபோன் பிராசசா்களை தயாரிக்கத் துவங்கியுள்ளன. ஏசுஸ் ஸென் ஃபோன்களில் இன்டெல் நிறுவனத்தின் பிராசசா்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 ( வாசகர்களுக்கு அலைபேசி தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யவும்)
-- Padasalai Author - Pa. Thamizh.







8 Comments:

  1. sir my mobile model SAMSUNG GALAXY TREND 2 .
    Please tell me the best app for POWERPOINT Create sir. I already download 1 app way to play store. But this, when I completed the task, after it's not work.

    ReplyDelete
  2. Please check following links

    https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officehub

    https://play.google.com/store/apps/details?id=com.mobisystems.office

    https://play.google.com/store/apps/details?id=cn.wps.moffice_eng

    ReplyDelete
  3. How to see Tamil font antroid mobils

    ReplyDelete
  4. wat s d difference between android one & kitkat4.2

    ReplyDelete
  5. wat s d difference between android one & kitkat4.2

    ReplyDelete
  6. Dear Thamizh sir

    Tnpsc group 4 Android phone - ல Apply முடியலையே Sir..? Any possibilities ...?

    ReplyDelete
  7. How to see Tamil font antroid mobiles lalipop 5.0.2

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive