"விண்?வளி ஆராய்ச்சியில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா,” என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) எரிவாயு கழக இயக்குனர் கார்த்திகேசன் பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 'இஸ்ரோ' சார்பில் விண்வெளி கண்காட்சி நடந்தது. இரண்டாம் நாள் விழாவில், தாளாளர் பாபுஅப்துல்லா தலைமை வகித்தார். பொருளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர் மாரிமுத்து வரவேற்றார். 'இஸ்ரோ' மூத்த விஞ்ஞானிகள் நாகராஜன், முருகன், பேராசிரியர் ராஜசேகர் பேசினர்.'இஸ்ரோ' எரிவாயு கழக இயக்குனர் கார்த்திகேசன் பேசியதாவது: மங்கள்யான் அனுப்பியதன் மூலம் ஆசியாவிலேயே முதல் நாடாக இந்தியா பெருமை பெற்றுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அப்துல்கலாம் பங்கு மிகவும் இன்றியமையாதது. கடின உழைப்பு தான் அவருக்கு வெற்றியை தேடித்தந்தது. 25 டன் எடை கொண்ட 'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு பணி மகேந்திரகிரியில் நடக்கிறது. இன்ஜினில் திரவ நிலையில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவதற்காக பரிசோதனை நடத்தப்பட உள்ளது. 'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பின் மூலம் உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இவ்வாறு பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...