தேர்வு நெருங்குவதால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மட்டுமல்ல, அனைத்து
மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப, பள்ளிக்
கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது.
தமிழகத்தில் தரம் உயர்த்திய 100 மேனிலை, 50 உயர் நிலை பள்ளிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையொட்டி 350 ஆசிரியர்களுக்கான மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 பள்ளிகளுக்கான கலந்தாய்வு இம்மாதம் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தரம் உயர்ந்த மேனிலைப் பள்ளிக்கான 100 தலைமை ஆசிரியர்கள் தவிர, எஞ்சிய 250 பேரை, பிற பள்ளிகளிலுள்ள காலி பணி யிடங்களை நிரப்ப, கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடம் குறித்த தகவல்கள் முதன்மை கல்வி அலுவலகங்கள் சேகரிக்கின்றன.பொதுத்தேர்வு நெருங்குவதால், அனைத்து அரசு மேனிலைப்பள்ளி களிலும், தலைமை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொள்கிறது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...