"நேரமில்லை என்று சொல்வது ஏமாற்றுவேலை" என்று
புளியம்பட்டியில் நடந்த புத்தக திருவிழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்
பேசினார். புளியம்பட்டியில் புத்தக திருவிழா ஐந்து நாட்கள் நடந்து
முடிந்தது. 25 பதிப்பகங்களின் பல ஆயிரம் புத்தகங்கள், கல்வி குறுந்தகடுகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டன. தினமும் மாலையில் சொற்பொழிவு நடந்தது. மூன்றாம்
நாளன்று இளசை சுந்தரம் தலைமையில், மனித வாழ்வை நடத்துவது விதியா? மதியா?
நிதியா என்னும் சொல்லரங்கம் நடந்தது.
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், வாசிக்க
நேரமிருக்கு என்னும் தலைப்பில் பேசியதாவது: பொதுவாக எந்த வேலை சொன்னாலும்
நேரமில்லை என்று சொல்வது வழக்கம். இது ஏமாற்று வேலை. எனக்கு மனமில்லை என்று
சொல். நேரமில்லை என்று சொல்லாதே என்பது அறிஞர் வாக்கு. இந்தியர்கள் ஒரு
ஆண்டுக்கு சராசரியாக 32 பக்கங்கள்தான் படிக்கின்றனர். ஆனால் வெளிநாட்டவர்
ஒரு ஆண்டுக்கு 1,200 பக்கங்கள் படிக்கின்றனர்.
ஒரு வாக்கியம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
எந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று தெரியாது. நிறைய
படியுங்கள். ஏதாவது ஒரு வாசகம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்.
திட்டமிட்டு செயல்பட்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு லேனா
தமிழ்வாணன் பேசினார்.
பேச்சாளர் பழ. கருப்பையா, ஒரு சொல் கேளீர்
என்னும் தலைப்பில் பேசுகையில், “மனிதன் பிறக்கும்போது மூச்சை இழுக்கிறான்.
இறக்கும்போது மூச்சை விடுகிறான். இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதுதான் மனித
வாழ்க்கை. நல்லறிவு பெற்ற நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும்" என்றார்.
10th tamil medeam scince www.padasalai.Net
ReplyDelete