அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவாகியிருந்த குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களாக மழை பெய்து
வந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்துள்ளதால் தமிழகத்தில் மழை
நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரமணன் கூறியது: வங்கக் கடலில் தமிழகம்-இலங்கை கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முற்றிலும் மறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.
ஆனால் தென்கிழக்கு அரபிக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் இருந்து ஈரப்பதமான காற்றினை இழுக்கும். அவ்வாறு ஈர்க்கும் போது, அந்த காற்று தமிழக நிலப்பகுதி வழியாக செல்லும். அப்போது தமிழகம் முழுவதும் மழை பெய்யும். அதனால் புதன்கிழமையும் மழை பெய்யும்.
அதேவேளையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான நிலவரப்படி பழனியில் 200 மி.மீ. மழையும், சத்திரப்பட்டியில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 120 மி.மீ. மழையும், குடவாசில் 110 மி.மீ. மழையும் பெய்துள்ளது. ஒட்டபிடாரத்தில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது என்றார் அவர்.
நாளை தீபாவளி நோண்பு என்பதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளுர் விடுமுறை விட இயலாத ஒரு சில பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்பட உள்ளதால், மழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்படுமா என பெரும்பாலான மாணவர்கள் ஆவலாக உள்ளார்கள்.
இனிமையான தீபாவளி..எங்களுக்கு இன்றும். தீபாவிளி நாளையும் தீபாவளி ..
ReplyDeleteபள்ளி விடுமுறை கணவரு டன் பேருந்தில் பயணம் என் குழந்தைகளை காணப்போகும்சந்தோசம் வழி. முழுவதும் தண்ணீர் வரலாறு காணாத மழை பழனியில் ...ரசித்துக்கொண டே. வந்தோம் ...ஆனால் நாங்கள் ரசித்து வந்த பாதை ஆபாய எச்சரிக்கை க்கு உண்டான பாதை என் பதை அறிந்ததும் ....ஆமாம் எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் ஓடியது ......நாங்கள் அவ்வழியில் வருவதற்கு முன்னர் ..
ReplyDeleteவெள்ளப் பெ