நுாலகங்கள்தான் அறிவின் கருவூலங்கள் என, அண்ணாமலை பல்கலையின் நுாலக அறிவியல் துறை தலைவர் நாகராஜன் பேசினார். தமிழ்நாடு
உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து, சென்னை, பாரதி அரசு மகளிர் கல்லுாரியின்
பொது நுாலகத் துறை, ஆராய்ச்சி படிப்பில், நுாலக தகவல் தொழில்நுட்ப துறையின்
பங்கு என்ற கருத்தரங்கை நடத்தியது.
அதில் பங்கேற்ற, அண்ணாமலை பல்கலையின் நுாலக
அறிவியல் துறை தலைவர் நாகராஜன் பேசியதாவது: ஆராய்ச்சி மாணவர்களும்,
ஆசிரியர்களும் நிறைய புத்தகங்களை வாங்க வேண்டி உள்ளது. ஆனால், தொழில்நுட்ப
புரட்சி, தகவல்களின் தொடர் முன்னேற்றம் போன்ற காரணங்களால், ஒரு தனி
மனிதனால் அனைத்து புத்தகங்களையும் சேகரிக்க முடியாது.
அந்த குறையை போக்குவதுதான் நுாலகங்கள்.
தகுதியான நபருக்கு, தகுதியான புத்தகங்களை, தகுந்த நேரத்தில் வழங்க வல்லவையே
சிறந்த நுாலகங்கள். அவை, கலாசாரம், அரசியல், அறிவியல், கல்வி, கலைகளின்
முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிப்பவை. அதனால், மாணவர்களும்,
ஆசிரியர்களும், நுாலகங்களை, நண்பனாக்கி கொள்ள வேண்டும். காரணம், அவைதான்
அறிவின் கருவூலங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...