இந்தியக் குடிமக்கள்
மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.
அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமார்த்யா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுஸக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராஸக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.
இந்தியாவில் வாழ்பவர்
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் கடந்த 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடும் இந்தியாவைச் சேர்ந்த சமூக
ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு
உள்ளது. பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன், அவர் இந்த பரிசை பகிர்ந்து
கொள்கிறார்.
தபால் மூலம் எம். ஏ. தமிழ் பட்டப்படிப்பு படிக்க
ReplyDeleteஅனுமதி அளிக்க தலைமை ஆசிரியர் மற்ற ஆசிரியர்களின்
பேச்சைக் கேட்டுக்கொண்டு மறுக்கிறார். நான் தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் அளித்துவிட்டு இப்போது
தபால் மூலம் சேர்ந்து படித்துவருகிறேன். இதற்கு வேறு பள்ளி
மாற்றலாகிச் சென்ற பிறகு அந்தப் பள்ளி தலைமை
ஆசிரயரிடம் பின் அனுமதி வாங்க முடியுமா? அதற்கு அரசாணை
இருக்கிறதா?
வணக்கம்,
ReplyDeleteபின் அனுமதி வாங்க இயலும். ஆனால் முன் அனுமதி வாங்குவதே சிறந்தது. என்ன காரணத்திற்காக தங்கள் முன் அனுமதி விண்ணப்பம் திருப்பப்பட்டது என முழுமையான தகவலை நமது இமெயில் ஐ.டிக்கு அனுப்பினால் மேற்கொண்டு நம்மால் ஆலோசனை வழங்சி உதவ இயலும். Our Email ID: padasalai.net@gmail.com
நன்றி!
அன்புடன் - பாடசாலை.