தற்போது பலரும்
ஜாக்கிங்
எனப்படும்
மெல்லோட்டத்தில்
ஆர்வத்தோடு
ஈடுபட்டு
வருகின்றனர்.
மெல்லோட்டம்
என்பது
விரைவான
நடைக்கும்,
வேகமான
ஓட்டத்துக்கும்
இடைப்பட்ட
சீரான
தன்மை
கொண்ட ஓட்டமாகும்.
உடலுக்கு ஏற்ற
சிறந்த
உடற்பயிற்சிகளில்
இதுவும்
ஒன்று.
இப்பயிற்சி
மாரடைப்பை
தடுக்க
உதவியாக
இருக்கிறது.
பெரும்பான்மையான
மருத்துவர்கள்
கூடத்
தங்களை
மாரடைப்பிலிருந்து
காத்துக்
கொள்வதற்காக
தினமும்
மெல்லோட்டத்தை
மேற்கொள்கின்றனர்.
மெல்லேட்டத்தின்
பயன்கள்
வருமாறு...
* நமது
இதயம்
சுருங்கும்போது
உடலின்
பல
பகுதிகளுக்கு
செல்லும்
ரத்தத்தின்
அளவு,
சாதாரண
நிலையை
விட
மெல்லோட்டத்தின்
போது
அதிகமாகிறது.
* ரத்தக்குழாய்களையும்,
ரத்த
குழாய்களை
சுற்றியுள்ள
அமைப்புகளையும்
மெல்லோட்டம்
வலுவடையச்செய்கிறது.
* ரத்தக்
குழாய்களின்
உட்பகுதிகளில்
ஏற்படும்
சிதைவு
மாற்றங்களை
இது
தடுக்கிறது.
* அதிகரித்த
ரத்த
அழுத்த
நிலையை
குறைக்க
துணைபுரிகிறது.
* மெல்லோட்டத்தினால்
இதயத்தமனிகளில்
ஓடும்
ரத்தத்தின்
அளவு
அதிகமாவதால்
தமனிகளில்
ரத்தம்
உறைவதை
தடுத்து
மாரடைப்பு
ஏற்படாமல்
காக்கின்றது.
* ரத்தத்தில்
உள்ள
கொலஸ்ட்ராலையும்,
டிரை
கிளிசரைடையும்
குறைக்க
உதவுவதால்
மாரடைப்புக்கான
வாய்ப்பு
குறைகிறது.
* மெல்லோட்டத்தினால்
உடம்பின்
கீழ்ப்பாகம்,
குறிப்பாக
கால்கள்
வலுவடைகின்றன.
தொப்பை
கரையும்.
* பெரும்பாலும்
காலை
வேளையில்
மெல்லோட்டத்தில்
ஈடுபடுவதால்
சுத்தமான
காற்றை
சுவாசிக்கும்
வாய்ப்பு
அதிகரிக்கிறது.
தூய
காற்றை
சுவாசிப்பது,
மூளைக்கும்
சுறுசுறுப்பு
கொடுக்கும்.
* வேகமான
நடையைவிட
மெல்லோட்டம்
அதிக
பயன்கள்
அளிப்பது
ஆய்வுகளில்
தெரியவந்துள்ளது.
எனவே
சோம்பல்படாமல்,
அதிகாலையில்
எழுந்து
மெல்லோட்டத்தில்
ஈடுபட
ஆரம்பியுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...