‘பள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு
தயாராகும் எண்ணத்தை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும்,‘ என முதன்மை கல்வி
அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாநில அளவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
தேர்வான சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வாடிப்பட்டி, திருமங்கலம்,
ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தன.
வாடிப்பட்டியில் ஆஞ்சலோ இருதயசாமி பேசியதாவது:
மாணவர்கள் திறன் அறிந்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில்
ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி
பருவத்திலேயே மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பல்வேறு போட்டி
தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் ஏற்படுத்த
வேண்டும். வரலாறு பாடத்தில் ஆண்டுகள், நிகழ்வுகளை எளிதாக நினைவில்
வைத்துக்கொள்ளும்படி எளிய வழிமுறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும், என்றார்.
ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் சீனிவாசகமூர்த்தி வரவேற்றார். தலைமையாசிரியை திலகவதி மற்றும் 300 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...