சீர்காழியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதுகலை ஆசிரியர் நியமனம் வெள்ளை அறிக்கை வேண்டும் அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
சீர்காழி,: முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட் டத்தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் காசி இளங்கோவன், மார்க்ஸ் திலக் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அசோக்குமார் செயல் அறிக்கை குறித்து பேசினார்.
கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு இரண்டு முறை ஆசிரியர் நியமனம் செய்துள்ளது. முதுகலை ஆசிரியர்களை நியமிக்கும் போது காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையில் 50 சதம் நேரடியாகவும், 50 சதம் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் இந்த விதியின் படி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட வில்லை. இது தகவல்பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வருகிறது. எனவே உடனடியாக இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அர சு அறிவித்தபடி தரம் உயர்தப்பட்ட 50 உயர்நிலைப்பள்ளிகளுக்கான பட்டியலை வெளியிட்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தர்ராசன், தாமஸ், சுப்ரமணியன் செய்தர். மாவட்ட பொறுப்பாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...