செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபாûஸ மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இஸ்ரோ, மங்கள்யானின் பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களில் இந்தச் சிறிய விடியோ படம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
6,779 கிலோமீட்டர் விட்டம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் முன் 22 கிலோமீட்டர் மட்டுமே விட்டம் கொண்ட இந்த துணைக்கோள் சிறிய புள்ளியைப் போல் தெரிகிறது.
இந்தத் துணைக்கோள் செவ்வாய் கிரகத்தைச் சராசரியாக 6000 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. சூரிய மண்டலத்தில் ஒரு கிரகத்தை மிக அருகில் சுற்றிவரும் துணைக்கோள் இதுதான்.
நாளொன்றுக்கு மூன்று முறை செவ்வாய் கிரகத்தை இது சுற்றி வருகிறது. இந்தத் துணைக்கோள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் போது செவ்வாய் கிரகத்திலிருந்து 66,275 கிலோமீட்டர் உயரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள்களான போபாஸ், டெய்மாஸ் ஆகியவை 1877-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இரண்டில் போபாஸ்தான் பெரியது. டெய்மாஸின் விட்டம் 12.6 கிலோமீட்டர் ஆகும். போபாஸ் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் பயம் என்பதாகும். இது ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் செவ்வாய் கிரகத்தை நோக்கி 1.8 மீட்டர் தூரம் நகர்கிறது.
இதனால், அடுத்த 5 கோடி ஆண்டுகளில் இந்த துணைக்கோள் செவ்வாய் கிரகத்தில் மோதி வெடிக்கலாம் என கணிக்கப்ட்டுள்ளது.
போபாஸ் என்ற பெயரில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...