இணையத்தில் ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்ததில் ஏற்பட்ட குறைகளை
சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது பதிவு மற்றும்
புதுப்பித்தல் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை அவர்களே இணையதளத்தில் பதிவேற்றம்
செய்து கொள்ளவும், பதிவினை புதுப்பித்து கொள்ளவும் உரிய வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவுதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள பதிவு
விவரங்களில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரியவருகிறது.
எனவே www.tnvelaivaaippu.gov.in
என்ற இணையதளத்தில் தங்களது பதிவு அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து
குறைபாடு ஏதுமிருப்பின் பதிவிறக்கம் செய்து, அந்த ‘பிரின்ட் அவுட்’
குறைபாடுகளுக்குரிய சான்றிதழ்கள் குடும்ப அடையாள அட்டை மற்றும் சாதி
சான்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலவலகத்தில் நேரில் சென்று சரி செய்து
கொள்ளலாம். தற்போது சிறப்புநேர்வாக பி.எஸ்சி.,(கணினி அறிவியல்),
பி.எஸ்சி.,(தகவல்தொழில்நுட்பம்) மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்புடன்
பட்டதாரி ஆசிரியர் தகுதியை பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் அனைவரும்
இம்மாதம் 23 மற்றும் 24 ம் தேதிகளில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் நேரில் வந்து தங்களது பதிவு விவரங்களை சரி செய்து கொள்ளலாம்,
என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...