Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜெயலலிதா ஜாமின் மனு நிராகரிப்பு!

          ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார்.


           ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார். முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது.

      மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத்   ரப்பில் இருந்து ஆஜரான வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் வெளிவிட ஆட்சேபம் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனால், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துவிடும் என்று செய்தி பரவியது.

       மேலும், நீதிபதி தனது உத்தரவை வாசிக்கத் தொடங்கியவுடனே, அதற்கான நம்பிக்கை தெரிந்தது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், தனது உத்தரவின் இறுதியில் நீதிபதி சந்திரசேகரன் இந்த வழக்கில் ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிப்பதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.

அதிமுக தொண்டர்கள் - மகிழ்ச்சியும் சோகமும்:
முதலில் ஜாமின் கிடைத்ததாக வெளியான தகவல் கேட்டதும், பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். இனிப்புகள் பரிமாறப்பட்டன. பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில், தீர்ப்பின் முடிவில், ஜெயலலிதா  ஜாமின் மனு நிராகரிக்கபட்டதாக செய்தி வெளியானவுடன், சோகம் பரவியது. அதிமுக தொண்டர்கள் பெரும் சோகம் அடைந்தனர்.

சிறைவாசம் நீடிப்பு!
கடந்த செப்.27ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப் படும் தீர்ப்புக்காக பெங்களூர் சென்றார் அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா. தீர்ப்பில் அவர் குற்றவாளி என்றும், 4 வருட சிறை மற்றும் நூறு கோடி ரூபாய் அபராதமும் என தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அவர் முதல்வர் பதவி இழந்ததுடன். சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். தொடர்ந்து அவர் பெங்களூர் பரப்பரன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உடனே அவர் ஜாமீன் பெற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஆனால், அடுத்தடுத்து வந்த தசரா விடுமுறை காரணமாக, விடுமுறைக் கால சிறப்பு நீதிமன்றம் அவருடைய ஜாமின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது.

        இந்நிலையில் அவர் மேலும் சில நாட்கள் சிறையில் கழிக்க வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து, அவரது ஜாமின் மனு அக்.7 (இன்று) விசாரிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

               அதன்படி இன்று காலை 73வது வழக்காக பட்டியலிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. நீதிபதி சந்திரசேகரன், ஜெயலலிதா தரப்பு வாதத்தைக் கேட்ட பின்னர், மதியம் 2.30க்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி, 2.30க்கும் வாதம் தொடர்ந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் வெளிவிட எதிர்ப்பு இல்லை என்று கூறினார். இதை அடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 11 நாள் சிறை வாசம் முடிந்து ஜெயலலிதா இன்று வெளியாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரசு வழக்குரைஞர் மறுக்காதபோதும் நிராகரிப்பு?
முன்னதாக, ஜெயலலிதா தரப்பில் ராம் ஜேத்மலானியும், சசிகலா, இளவரசி தரப்பில் வழக்குரைஞர் அமீத் தேசாயும் வாதிட்டனர். ஜெயலலிதா நாட்டை விட்டு எங்கும் தப்பி ஓடி விட மாட்டார் என்று ராம் ஜேத்மலானியும், வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைப்பார் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கும் வாதிட்டனர்.

        மேலும், லாலு ஜாமீன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைச் சுட்டிக் காட்டி ராம் ஜேத்மலானி வாதிட்டார். இருப்பினும், உணவு இடைவேளை முடிந்து 2.30க்கு மீண்டும் வாதம் தொடரும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

               ஜெயலலிதா தரப்பு வாதம் முடிந்த நிலையில், சசிகலா தரப்பில் தொடர்ந்த வாதத்தில், ஜெயலலிதாவின் பினாமியாக சசிகலா செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஜெயலலிதா சொத்து சேர்க்க சசிகலா உடந்தையாக இருந்தார் என்பதை ஏற்க முடியாதென்றும் வாதிட்டார் அமீத் தேசாய்.

                   ஆனால், பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், நிபந்தனை ஜாமின் வழங்கப் படுவதற்கு ஆட்சேபம் இல்லை என்றார். இந்நிலையில், வாதம் முடிந்தபிறகு மதியம் 3.35 மணி அளவில் தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியபோது, இவற்றை எல்லாம் குறிப்பிட்ட நீதிபதி, பின்னர், இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் குற்றவாளிக்கு ஜாமின் வழங்க எந்த வித முகாந்திரமும் இல்லை என்றும், குற்றவாளி தரப்பில் கோரப்பட்ட தண்டனைக்குத் தடை கோரும் மனு மற்றும் ஜாமின் மனுவை நிராகரிப்பதாக அவர் அறிவித்தார். மேலும் ஜாமின் கொடுப்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.

             இதனால் ஜெயலலிதாவின் சிறைவாசம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த செய்தியைக் கேட்டதும் அதிமுக தொண்டர்கள் பெரிதும் சோகம் அடைந்தனர்.
உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பு!

            நீதிபதி சந்திரசேகரன் தனது உத்தரவில், ஜாமின்  கொடுப்பதில் தமக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த பின்னர், அதிமுக தரப்பு வழக்குரைஞர்கள் பெரிதும் குழப்பம் அடைந்தனர். இதன் பின்னர் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாகவும் தெரிவித்தனர். இதனால் ஜெயலலிதா உடனடியாக சிறையில் இருந்து வெளியாகும் வாய்ப்பு தள்ளிப் போய்விட்டது.

 

ஜெயலலிதாவுக்கு கிடைத்தது நிபந்தனை ஜாமின் என்று வெளியான தகவலால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. இதனைத்தொடர்ந்து  தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் இதுகுறித்து வெளியானது.



நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இன்று மதியம் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து 3.30 மணிக்கு ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா வழக்கு : ராம் ஜெத்மலானி வாதத்தின் முழு விவரம்

சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானியின் வாதம் நிறைவு பெற்றது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


இதில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, அரசு தரப்பு கருத்தைக் கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம். மேலும், இது போன்ற வழக்குகளில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.

அரசு வழக்குரைஞர் பவானி சிங்கின் வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் கூறிய ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா, சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர். அவருக்கு ஜாமீன் வழங்கினால், நாட்டை விட்டு எங்கும் தப்பிச் சென்றுவிட மாட்டார் என்றும் உறுதி அளித்தார்.

ஜெயலலிதா தரப்பு மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, சசிகலா சார்பில் வழக்குரைஞர் அமித் தேசாய் தனது வாதத்தை துவக்கியுள்ளார்.




11 Comments:

  1. arasan anre kolvaan......Theivam ninru kollum..... nanri...

    ReplyDelete
  2. IRUKKIRADU ENDRU POWER KATTIYADARKKU PALAN ANUBAVIKKARAR. ADE POL EDUCATION SECRATERY YUM ARIVIPPAR. TET LA 90 MARK EDUPPADU EVEOLVE KASTAM ENA NAMAKKU TERIYUM. APPADI EDUTHUM +2 MARK, UG MARK KETTU SAGA ADICHITANGA PAVIGAL. NAMMAL ENNA SEIYA MUDIYUM, ADAN KADAVUL THANDITHUKONDIRUKKIRAR. THANKS GOD. . . .

    ReplyDelete
  3. IRUKKIRADU ENDRU POWER KATTIYADARKKU PALAN ANUBAVIKKARAR. ADE POL EDUCATION SECRATERY YUM ARIVIPPAR. TET LA 90 MARK EDUPPADU EVEOLVE KASTAM ENA NAMAKKU TERIYUM. APPADI EDUTHUM +2 MARK, UG MARK KETTU SAGA ADICHITANGA PAVIGAL. NAMMAL ENNA SEIYA MUDIYUM, ADAN KADAVUL THANDITHUKONDIRUKKIRAR. THANKS GOD. . . .

    ReplyDelete
  4. நான் எழுதுவது உங்களின் நன்மைக்கு எனநினைத்து கொள்ளுங்கள். பாடசாலை மேலாண்மைக்கு, தாங்கள் ஆசிரிய்களின் நன்மைக்காக இரவு பகலாக் பாடுபட்டு தொடர்ந்து கல்விக்காக ஒரு வலைத்தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.இப்பாடசாலை வலைப்ப்குதியில் கல்விக்கு சம்பந்தப்படாத செய்திகளை வெளியிடாதீர்கள். இது மற்றவர்களுக்கு புண்படும். செய்தியினை உட்னே அனைவரும் தெரிந்துகொள்ள வெளியிடுகிறீர்கள்.இது ஆதாங்கம் அனைவருக்கும் உண்டு. தய்வு செய்து அரசிய்ல் நிகழ்வுகளை தவிர்ந்து கல்விச்சம்பந்தபட்ட்வைகளை எழுதினால் ஆசிரியராகியவருக்கும், ஆசிரியராக போகிறவர்களுக்கும்.வேலையில்லா பட்டதாரிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள் ஏதுவாக அமையும். தவிர்க்கவேண்டியவைகளை தவிர்க்க.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், திரு. பிரியங்கா வி.ஐ.பி அவர்களே,

      தங்கள் பதில்கள் நம்மை மிகவும் யோசிக்க வைத்தது. ஆம், உண்மை தான். அவ்வப்போது கல்வி சார்ந்த செய்திகளை தவிர்த்து ஒரு சில ப்ளாஸ் செய்திகளையும் வெளியிட்டாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இருப்பினும் தங்கள் ஆலோசனைக்கு நன்றி! முடிந்தவரை தவிர்க்க முயற்சிக்கிறோம்.

      நன்றி!
      என்றும் அன்புடன் - பாடசாலை.

      Delete
  5. இன்று மதுரை உயர் நீதி மன்றத்தில் அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கு (ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்துவது) விசாரனை நடைபெற்றது. வழக்கின் விசாரனை மீண்டும் வரும் ஆக்டோபர் மாதம் 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. By ARGTA (genuine) brte association tamilnadu m.o madurai b.o villupuram 9443378533

    ReplyDelete
  6. நாங்களும் இப்படி தான் அம்மா. வெயிட்டேஜ் கேன்சல் பண்ண சொல்லி கெஞ்சினோம், நீங்க பண்ணல. ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. தெய்வம் அன்றே கொல்லும்.

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே....
    வணக்கம் பாடசாலை தோழரே........
    Irukkura vaccant ah kudukala.... evlo SG teachers naraga vazhkai la irukanga nu ungaluku puriya vaikkavum than ithu.... ipo posting la nangalum poiruntha SG pay raise panuvathu engalukum undu.... ok.... VAZHGA... engalukuvelai kidaithal than ungaluku ஓஓஓஓஓஓஓட்ட்ட்டுடு.. 7.5 சனி மடியிலயே மல்லாக்க படுத்துருக்குதுயா.

    ReplyDelete
  8. ETHU ENNA TET VALAKKA, EVARKALUKKU SATHAGAMAGA THEERPPAI VANGUVATHARKU. PATTATHARI ASIRIYARKAL EVALAVU KANNEER VADITHIRUPPARKAL. ANTHA PAVATHIN PALAN THAN INTHA NETHI ADI THEERPPU.

    ReplyDelete
  9. இப்போது தான் நீதித்துறையின் மேல் நம்பிக்கையே வருகிறது..இது என்ன தமிழ் நாடா ,ஒரே வழக்கிற்கு பல தீர்ப்புகள். கிடைக்க...அது கர்நாடகா ஐகோர்ட்.. ஒரு வழக்கிற்கு ஒரு தீர்வு தான் உண்டு.."பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.." TET ல் எங்களுக்கு... இப்போது உங்களுக்கு ........

    ReplyDelete
  10. சென்னையில் ஒரு இடம் விடாமல் தெரு தெருவாக சென்ற மாதம் பட்டதாாி ஆசிாியா்கள் உண்ணாவிரதம் இருந்தனா். ஒரு டேஸ் கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உண்ணாவிரதம். (ஏமாற்றபட்ட வேலையில்லா பட்டதாாி ஆசிாியாிா்களின் பாவம் சும்மா விடாது. இது மட்டுமில்லை. இன்னும் நிறைய பேருக்கு இதே நிலை காத்து இருக்கிறது.)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive