இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முதல்
தலைமுறையினர், இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதியை
எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துகின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ்
மக்கள் சங்கம், இந்திய மாண வர் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை,
தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை இணைந்து இன்று
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்
பணிநியமனங்களின் போது வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால்
முதல்தலைமுறையினர், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பெரிதும்
பாதிக்கப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை கடை பிடிக்கும் போது வாய்ப்புகள்
மறுக்கப்படுவதாக தோன்றுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்கும் தொடர்ந்து நடப்பதால்
பணி நியமனத்தில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதற்கு உரிய தீர்வை அரசு
எடுக்கவில்லை. மேலும் மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசா¬ணையை ரத்து செய்தது
தொடர்பாக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. பின்னடைவு காலிப் பணியிடங்களையும்
நிரப்பவில்லை இதனால் மேற்கண்ட அமைப்புகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துகின்றன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள்
சங்கத்தின் தலைவர் சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவர் பெற்றோர் சங்க செயலாளர் அருமைநாதன்
உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேச உள்ளனர்.
பாவப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் புலம்பல்
ReplyDelete• நாங்களும் தமிழர்கள்தான் எங்களுக்கும் ஓட்டுரீமை உண்டு…………..
• சமதர்மம் ,சமுகநீதி என்றால் என்ன ?
• அரசியல் கட்சிகளே ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை நடைமுறை படுத்தும்போது…………………………..
• அரசு வேளையில் ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வேளை முறை ஏன் அமல் படுத்த கூடாது ?
• அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல் பட்டதாரி,முதல் அரசு வேலை பெறும்
குடும்பம் என இலக்கு நிர்ணயம் செய்து தகுதி உள்ளவர்களுக்கு 20% அரசு
வேளையில் ஒதுக்கிடு செய்தால் எல்லா மக்களும் பயன்பெறலாம்.மழை பெய்தால்
விவசாயம் பெருகும் காவிரி,கடைமடை பகுதிக்கு காவேரி தண்ணீர் மக்கள் வாழ்வு
வளம் பெற இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
• 2016 ம் தேர்தல் மிகப்பெரிய மாற்றம் வர வாய்ப்பாக அமையும்.
• எல்லேரும் ஏற்க்கும் தீர்ப்பு எடுக்கப்பட்டால் சுபம்……………
• 15 ஆயிரம் குடும்பமா ………….!
• 60 ஆயிரம் குடும்பமா ………….!
• இப்போது நிலை மிகவும் சிக்கலானது நல்ல தீர்வு எடுக்கப்பட்டால் சுபம்…………
• அரசு வழங்கும் டெட் வெய்ட்ஜ் முறை.
• டெட் வெய்ட்ஜ் முறைப்படிபார்தால் அதிக ஓட்டு பெற்ற இளைஞர்களுக்கு……..
• அமைச்சர் பதவி உண்டா?
• மக்கல் நலன் என்றால் என்ன ?
• தமிழர்கள் நலன் காக்கும் செயல் எது?
• தமிழன் ஒருவனுக்கு வேலை இல்லை என்றால் தமிழகம் இருந்து என்ன பயன்?
• தலைவர்கள் இருந்து என்ன பயன்?
• மக்கலுக்காக அரசா? அரசியலுகாக மக்களா?
• தமிழ்ன் நலம் காத்த தலைவர்கள் எங்கே?
• மனித உரிமைகள் என்றால் என்ன ?
• 30 -58 வயது வரை வேலை செய்யும் அறிவார்ந்தவர்கள் அனுபவம் ,திறமை
,தமிழகத்திற்க்கு தேவயில்லயா?
• பட்டதாரிகள் பொறுத்தவரை
• வேலைவாய்ப்பு + டெட் +அனுபவம் என 3 க்கும் மதிப்பெண் வழங்கலாம்.
ORU MATHA KALAMAGA PATTATHARI ASIRIYARKAL NADATHIYA PALVERU KATTA PORATTANKALAIYE EVARKAL KANDUKOLLA VILLAI. EVARKAL ORE ORU NAL NADATHIYA KANDANA ARPPATTATHAIRKKU THAN UDANE PATHIL SOLLA POKIRARKALAKKUM.( EVARKALIN KORIKKAIKALAI KETGA AMMA EPPO ENGE IRUKKANGA) WEIGHTAGE MURAIYIL PANI NIYAMANAM MUDINTHU ANAIVARUM VELLAIKKU SENDRU VITTANAR. EVARKAL IPPOTHUTHAN THOONGI ELUNTHIRUKKIRARKAL.
ReplyDelete2013 tntet la pass seithavarkaluku munurimai kettu porratam or vazhakku thodarungal athuthan sarayana vali..
ReplyDeletesecond grade teacher ku intha murai kuraivana posting matumea poda patullathu.so matravarkalin vazhkai tharam uyara matru pani or avarkaluku arasu sariyana thirvu thara vendum
ReplyDelete