சிபிஎஸ்இ
மற்றும் யுஜிசி சார்பில் நடத்தப்படும்
உதவி பேராசிரியர் அல்லது இளநிலை ஆராய்ச்சியாளர்
உதவித்தொகை மற்றும் உதவி பேராசிரியர்களுக்கான
தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்க
பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் ராம் கணேஷ் வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பு:-
தேர்வு
மையம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்
எந்தெந்த
பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்?
தமிழ்,
ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்கள் , கலைப்பிரிவு
பாடங்கள் , கணினி அறிவியல், மின்னணுவியல்
மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட 79 பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு முடித்த
மற்றும் படிக்கும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எப்படி
விண்ணப்பிப்பது?
இத்தேர்வை
எழுத விரும்புவோர் சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு
செய்து, பின் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப
கட்டணம் எவ்வளவு?
பொதுப்பிரிவு
விண்ணப்பதாரர்கள் ரூ.450.
ஒபிசி விண்ணப்பதாரர்கள் ரூ. 225.
எஸ்சி
, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி
மாணவர்கள் ரூ.110 தேர்வு கட்டணத்தை
செலுத்தி அதற்கான சலான் பெற்று
கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன்
ஏதாவது இணைக்க வேண்டுமா?
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சாதி மற்றும்
கல்வி சான்றிதழ் வங்கி சலான் நகல்,
புகைப்படம் மற்றும் உரிய சான்றிதழ்களை
இணைக்க வேண்டும்.
எந்த முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்?
ஒருங்கிணைப்பாளர்,
விரிவுரையாளருக்கான
தகுதித் தேர்வு,
பாரதிதாசன்
பல்கலைக்கழகம்,
திருச்சி
-24
விண்ணப்பிக்க
கடைசி நாள்: 25-11-2014 மாலை 5 மணி.
தேர்வுக்கான
விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய இறுதி நாள்:-
15-11-2014
For more details visit:
www.cbscnet.nic.in
it is very good information
ReplyDelete