எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ஓ.என்.ஜி.சி.,), வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிறைய
உள்ளதாக, வேதியியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
உற்பத்தியில், 23வது
இடத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், பெட்ரோலிய பொருட்களை உலக நாடுகளிடம்
இருந்து வாங்குவதில், ஆறாவது இடத்தில் இருக்கிறோம். அதனால், நம் நாட்டில்,
புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலங்கள் உள்ள இடங்களை கண்டறிய வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த தேடுதலில் தான் எண்ணெய் மற்றும் இயற்கை
எரிவாயு கழகம் ஈடுபட்டு வருகிறது.
எண்ணெய் கிணறுகளை தோண்டும் போது, 'ட்ரில்லிங் ப்ளூயிட்' எனப்படும்,
ஆழ்குழாய் உயவு எண்ணெயை பயன்படுத்துகிறோம்.அதுதான், நுாறு நாட்களில் நடைபெற
வேண்டிய வேலையை, ௫௦ நாட்களில் முடிக்க துணை புரிகிறது. அந்த 'ட்ரில்லிங்
ப்ளூயிட்' தயாரிப்பில், நிறைய வேதியியல் துறையை சேர்ந்தோர்
தேவைப்படுகின்றனர்.அதேபோல், ஆழ்குழாய் தோண்டும்போது, மண் சரியாமல் இருக்க,
'கேசிங்' எனப்படும், சிமென்ட் கான்கிரீட் சுவரை அமைப்பர். அந்த 'கேசிங்
சிமெண்ட்' தயாரிப்பிலும், வேதியியல் படித்தோருக்கு நிறைய வேலைவாய்ப்புகள்
உள்ளன. நாம், எண்ணெய் கிணற்றில் இருந்து, 'க்ரூட் ஆயில்' எனப்படும் கச்சா
எண்ணெய் வடிவத்தில் தான் எடுக்கிறோம். அதை, பெரும்பாலும், தனியார் எண்ணெய்
நிறுவனங்கள் தான், சுத்திகரிக்கின்றன.
வேலைவாய்ப்பு : கச்சா எண்ணெயில், பெட்ரோல், டீசல், உள்ளிட்ட பல்வேறு
பொருட்கள் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும், கச்சா எண்ணெயின் தரத்தை அறியும்
பணிக்கு, வேதியியல் படித்தோர் தேவைப்படுகின்றனர். இதுமட்டுமல்லாமல்,
பல்வேறு பணிகளுக்கும் வேதியியல் துறையை சேர்ந்தோர் தேவைப்படுகின்றனர்.
ஆனால், வேதியியலில் பட்ட மேற்படிப்பு முடிக்கும் மாணவர்கள், குறிப்பாக,
தமிழக மாணவர்கள், ரசாயன தொழிற்சாலை போன்ற இடங்களுக்கு தான் செல்ல போட்டி
போடுகின்றனர். அதனால், பெரும்பாலும் அவர்களுக்கு, நிரந்தரமில்லாத, தனியார்
துறை சார்ந்த வேலை வாய்ப்புகளே கிடைக்கின்றன. ஆனால், எண்ணெய் மற்றும்
இயற்கை எரிவாயு கழகத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொண்டு,
தகுதியை வளர்த்து கொண்டால், மத்திய அரசின் நிரந்தர வேலை கிடைப்பதோடு,
நாட்டின் வளர்ச்சியில் உதவிய திருப்தியும் அவர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு
அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...