சரியாகப் படிக்கவில்லையென்றாலும் முடியும் என
நினைத்தால் சாதிக்கலாம் என்று சந்திராயன், மங்கள்யான் திட்ட இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை கூறினார். மயில்சாமி அண்ணாதுரை பேசியது: 5 முறை
முயன்று அமெரிக்காவும், 15 முறை முயன்று ரஷியாவும் சாதித்த விஷயத்தை நாம்
முதல் முறையிலேயே சாதித்துள்ளோம். ஜப்பான், சீனா ஒரு முறை கூட சாதிக்காததை
நாம் சாதித்துள்ளோம்.
கிராமத்தில் இருந்து வந்தோமா, தாய்மொழியில்
கல்வி கற்றோமா என்பது முக்கியமில்லை. "உன்னால் முடியும்' என்ற எண்ணம்
இருந்தால், இருக்கும் இடத்தில் இருந்து நிலவைத் தொடலாம்.
பெரிதாக படிக்கவில்லையென்றாலும் சாதிக்க
முடியும். நாசா விஞ்ஞானிகள் போன்று பெரிய கல்வி நிலையங்களில் படிக்கும்
வாய்ப்பு எனக்கும், எங்களது விஞ்ஞானிகளுக்கும் கிடைக்கவில்லை.
ஆனால், அவர்களால் முடியாததை 18 மாதங்களில்
முடித்துக் காட்டியுள்ளோம். அவர்கள் செலவு செய்ததில் 10-இல் ஒரு பங்கைதான்
செலவளித்துள்ளோம். அதற்கு உழைப்பே காரணம்.
விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா சரிநிகராக நடத்தப்படுவதற்குக் காரணம், நம்மால் முடியும் என்று நினைத்ததுதான்.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு இடத்தில் சாதிக்க வேண்டும் என்று விதை விழும். அதுதான் வளர்ந்து பெரிதாகும் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக
வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன்,
வசந்த் அன் கோ தலைவர் எச்.வசந்தகுமார், தஞ்சை பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர் அவ்வை நடராசன், வி.ஜி.பி. குழுமத்தின் துணைத் தலைவர் செல்வராஜ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...