இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலக் கல்வி
முறையில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு
உதான் கல்வி திட்டத்தின் மூலம் ஐஐடி மற்றும் என்ஐடிகளில் சேரும் வகையில்
பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும் மையங்கள் தமிழகத்தில் இரண்டே இடங்களில் மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பயிற்சி வகுப்பு மையம் அமைக்கப்படாததால், அந்த நகரத்தில் உள்ள தகுதி வாய்ந்த மாணவிகள் உதான் திட்டத்தால் பயனடைய முடியாமல் போகும்.
எனவே, உதான் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு மையங்களை தமிழகத்தில் அதிக அளவில் துவக்கவும், உதான் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து கால அவகாசம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...