Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட தடை நீக்கம்: தமிழக அரசு புதிய உத்தரவு

           மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடலமைப்புக்கேற்ப வாகனங்களை மாற்றுருவப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் இருந்த தடைகளை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
             வாகனம் ஓட்ட முறையான பயிற்சி பெற்றவர் என்பதற்கு ஒரே சான்று, ஓட்டுநர் உரிமம்தான். ஆனால், மோட்டார் வாகன சட்டத்தின்படி, மாற்றுத் திறனாளி களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கு வதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.
                   இதன் காரணமாக தமிழகத்தில் மூன்று சக்கர மோட்டார் வாகனங் கள் ஓட்டுவோரில் (அரசின் விலை யில்லா வாகனம் பெற்றவர்கள் உட்பட) சுமார் 85 சதவீதம் பேரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. அதேபோல, வாகனத்தை தங்கள் உடலமைப்புக்கேற்ப மாற்றுருவம் செய்த மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி, விபத்தில் சிக்கி மாற்றுத் திறனாளி காயமடைந் தாலோ, வாகனம் சேதமடைந் தாலோ காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியாத நிலை தொடர்கிறது.
தமிழகம் முழுவதும் நிலவிய இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங் களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தமிழக போக்கு வரத்து ஆணையர் சத்யவிரத சாகுவின் கவனத்துக்கு கொண்டு சென்றன.
இதைத் தொடர்ந்து, 2 புதிய ஆணைகளை போக்குவரத்து ஆணையகம் பிறப்பித்து, அதன் நகல்களை அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக் கும் அனுப்பியுள்ளது. அந்த உத்தரவு விவரம்:
மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989 விதி 129-ன்படி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணிமனைகளில் மாற்றுருவப் படுத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்ய முடியும். இதன்படி, தமிழகத்தில் டிவிஎஸ் நிறுவனம் மட்டுமே அங்கீகாரம் பெற்றிருப்பதால், அந்த நிறுவனத்தில் மாற்றுருவப் படுத்தப்பட்டவை நீங்கலாக மற்ற வாகனங்களை மாற்றுத் திறனாளி கள் சட்டப்பூர்வமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு அங்கீகாரம் இல்லாத பணிமனைகளிலும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாற் றுருவப்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்படுகிறது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலரிடம் இருந்து உரிய சான்றிதழைப் பெற்று அளிக்கும் பட்சத்தில், மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களை பதிவு அதிகாரி களும், உதவிப் பதிவு அதிகாரி களும் ஆய்வு செய்து வகை மாற்ற மேற்குறிப்புகளை வழங்க வேண்டும். அதேபோல, மாற்றுரு வப்படுத்தப்பட்ட வாகனங்களை இயக்கத் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் எஸ். பூபதி கூறும்போது, ‘தமிழக அரசின் இந்த உத்தரவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
2004-ம் ஆண்டு வரையில் இரு சக்கர வாகனம் ஓட்ட தகுதி இருப்பதாக ஆர்த்தோ டாக்டர்களிடம் சான்றிதழ் பெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கியர் இல்லாத வாகனம் ஓட்டுவதற்கு உரிமங்கள் வழங்கப்பட்டு வந்தன. பிறகு, உரிமம் வழங்குவது நிறுத்தப் பட்டது. ஏற்கெனவே இருந்தது போல ஆர்த்தோ டாக்டர்களிடம் சான்றிதழ் பெற்று கார் மற்றும் இரு சக்கர வாகன உரிமம் பெறும் வசதியையும் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்’ என்றார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive